உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுருக்கு கம்பியில் சிக்கி புலி பலி; மூவர் கைது

சுருக்கு கம்பியில் சிக்கி புலி பலி; மூவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார்: கூடலுார் அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி, 4 வயது ஆண் புலி இறந்தது குறித்து வனத்துறையினர் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் இரண்டாவது மைல் அருகே, செலுக்காடி தனியார் எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் புலி இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியினர், வனத்துறைக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gryui580&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து, முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.ஆய்வில், சுருக்கு கம்பி கழுத்தில் சிக்கி புலி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மோப்ப நாய்கள், அதவை, சார்லி அழைத்து வரப்பட்டு, அதன் உதவியுடன் அப்பகுதியில் வன ஊழியர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், பிரகர்தி அறக்கட்டளை கால்நடை டாக்டர் சுகுமாரன், சேரம்பாடி அரசு கால்நடை டாக்டர் நவீன்குமார் ஆகியோர் அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின் புலியின் உடல் எரிக்கப்பட்டது. புலிக்கு சுருக்கு வைத்து கொன்றது தொடர்பாக, வனத்துறையினர் மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'இறந்த ஆண் புலிக்கு, 4 வயது இருக்கும். சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளது. தற்போது மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மற்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anantharaman Srinivasan
நவ 28, 2024 11:52

வனகாடுகளில் மரங்களை வெட்டி சாய்க்கும் பசு தோல் போர்த்திய புலிகளை இனங்கண்டு யார் பிடிப்பது..??


வைகுண்டேஸ்வரன்
நவ 28, 2024 10:15

சரி, கோபாலபுரம் ஒங்கோலிலா இருக்கு? நன்றி.


Anonymous
நவ 28, 2024 19:24

இல்லை, ஓங்கோல் கூட்டம் தான் இப்போ ஸ்ட்ராங்கா கோபாலபுரத்தில் உட்கார்ந்துட்டு இருக்கு, இந்த அடிப்படை கூட தெரியாத அளவுக்கு ஒரு அப்பாவியா நீங்க? அய்யோ பாவம், தெரிஞ்சு வச்சுக்க வேண்டியதை ரொம்ப சவுகரியமாக மறக்குறீங்க பாருங்க, அது தான் ஓங்கொல் கூட்டத்துக்கு ஜால்ரா அடிக்க முதல் தகுதி போல இருக்கு.வாழ்த்துக்கள்.


JeevaKiran
நவ 28, 2024 10:01

காரணத்தை பிறகு சொல்கிறார்களாம்? என்னத்த சொல்ல. ஆனால் இதுவரை இது போன்ற குற்றங்களில் யாரும் தண்டித்ததாக செய்திகள் வரவில்லையே? பத்திரிக்கைகளும் இது போல் சூடான செய்திகளை போட்டு தங்களுடைய வியாபாரத்தை பெருக்கி கொள்கிறார்கள்? எல்லாம் கூட்டு களவாணிகள். காட்டில் எஸ்டேட்டுகளுக்கு ஏன் அனுமதி தரணும். ஒன்று விவசாயம் பண்ணனும். இல்லையென்றால் அந்த இடத்தை வனமாக அறிவிக்கணும். அரசு இதை செய்யுமா? வனவிலங்குகளின் மேல் அரசாள்பவர்களுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை.


வைகுண்டேஸ்வரன்
நவ 28, 2024 08:40

" ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற"வாங்க வாங்க.. எங்கடா இந்த உளறல் ரொம்ப நாளா காணுமே என்று பார்த்துண்டிருந்தேன். இதுக்கு என்ன சார் அர்த்தம்? கோவால் னு புறா இருக்கா? எந்த ஊரில்? மணிப்புறா தெரியும், அதென்ன கோவால் புறா?


வைகுண்டேஸ்வரன்
நவ 28, 2024 08:40

"ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற"வாங்க வாங்க.. எங்கடா இந்த உளறல் ரொம்ப நாளா காணுமே என்று பார்த்துண்டிருந்தேன். இதுக்கு என்ன சார் அர்த்தம்? கோவால் னு புறா இருக்கா? எந்த ஊரில்? மணிப்புறா தெரியும், அதென்ன கோவால் புறா?


Anonymous
நவ 28, 2024 09:38

பயங்கர ஜோக் அடிச்சதா நினைப்பா? கோபாலபுரம் என்பதை டைப் செய்வதில், எழுதியவருக்கு எழுத்து பிழை ஏற்பட்டுள்ளது, அதை எள்ளி நகையாட தெரிந்த வைகுண்டத்துக்கு , ஓங்கோல் குடும்பத்தின் ஆட்சியில் வன உயிரினங்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக இருப்பது பெரிய விஷயமாக தெரியவில்லை, அது சரி, சேரும் இடத்தின் அறிவு தானே உங்களிடமும் பிரதிபலிக்கும்? விலைமதிப்பில்லாத வனசெல்வங்கள் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்கும் என்று எதிர் பார்ப்பது எங்கள் தவறு தான்.


theruvasagan
நவ 28, 2024 17:48

அது கோவால் புறா இல்லையாம். கோல்மால்புரம் என்பதை டைப் பண்ணும்போது அப்படி தவறாக வந்துவிட்டதாம். அச்சுப்பிழை. இப்ப சரியா.


Kalyanaraman
நவ 28, 2024 08:36

காட்டுக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்டுகளை மூடினாலே காடு பாதுகாப்பாக இருக்கும். அரசியல்வாதிகளும் அரசு உயர் அதிகாரிகளும் கும்மாளம் போடுவதற்காக விட்டு வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது.


raja
நவ 28, 2024 07:36

விடியல் திருட்டு மாடல் ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற திராவிடர்கள் ஆட்சிக்கு வந்ததே சட்ட விரோதம் தான் யுவர் ஆணர்


வாய்மையே வெல்லும்
நவ 28, 2024 06:43

அந்த வாயில்லாஜீவன் புலியின் உயிரை ஈவிறக்கின்றி குடித்த புண்ணியம் செய்த மகாப்ரபுக்களின் பெயரை சொல்ல வாயில் என்ன கொழுக்கட்டையா ஒளிந்திருக்கிறது? யாரை காப்பாற்ற இந்த முயற்சி ?


முக்கிய வீடியோ