உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு எப்படி விசாரணை நடக்கிறது: ஐகோர்ட் கேள்வி

அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு எப்படி விசாரணை நடக்கிறது: ஐகோர்ட் கேள்வி

சென்னை: அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு, கொலை, வன்முறைகளை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. தனது நிலம் நில அபகரித்தது தொடர்பாக கார்த்தி என்பவர் அளித்த புகார் குறித்து சி .பி.ஐ.,விசாரிக்க உத்தரவு பிறத்த ஐகோர்ட் சிறப்பு குழுவை அமைத்து நான்கு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து இதுகுறித்து சென்னை ஐகோர்ட் தெரிவித்து இருப்பதாவது: ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு கொலை, வன்முறைகளை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர். வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருகிறது. நிலம் கார்த்திக் என்பவருக்கு சொந்தம் என்று தெரிந்த பின்னரும் காவல்துறை கண்களை மூடிக் கொண்டு உள்ளது.ரவுடிகளுடன் போலீசார் கைகோர்த்து கொண்டதால் உண்மையான நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்று நிகழ்ந்தால் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை குலைந்து விடும்.இவ்வாறு ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஆக 17, 2024 12:09

எதுக்கும் அவங்கவங்க முப்பாட்டன் தந்த சொத்துக்கெல்லாம் வகுப்பு வாரிய NOC வாங்கி வச்சுக்கணும். இல்லாட்டி விற்கப்போனா வாங்க ஆள் வராது. பட்டா சிட்டா அடங்கல் இருந்தாலும் அந்த NOC இல்லாட்டி விக்கிறது ஈஸியில்ல.


செந்தில்குமார்
ஆக 16, 2024 21:13

இதுல வக்ஃபு வாரியம் ஒருபக்கம் அவங்க பங்குக்கு சுருட்றாங்க


Ramesh Sargam
ஆக 16, 2024 20:56

நம் நாட்டில் நிகழும் எல்லா நில அபகரிப்புக்களும் அரசியல்வாதிகளின் துணையுடன் நடக்கிறது. இது நேற்று பிறந்த குழந்தைக்கு கூட நன்றாக தெரியும்.


sugumar s
ஆக 16, 2024 20:51

Now also people not have trust on police in TN.


Ms Mahadevan Mahadevan
ஆக 16, 2024 19:31

இது விடை தெரியாத கேள்வி


Ramesh Sargam
ஆக 16, 2024 21:11

இல்லை இல்லை விடை நீதிமன்றங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் சட்டத்தின் மூலம் விடை தேடுகிறது நீதிமன்றம்.


Ms Mahadevan Mahadevan
ஆக 16, 2024 19:30

ரவுடி, அரசியல்வாதி, காவல்துறை - .தருமம் நியாயம் ?


Rangarajan Cv
ஆக 16, 2024 19:21

Only solution to this menace, i feel, is to segregate police control from the State govt. like EC, law enforcement be brought under judiciary.


sridhar
ஆக 16, 2024 19:10

2006-11 கால கருணாநிதி ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு விஷயத்தில் எந்த முக்கிய புள்ளியும் கைதாகவில்லை . போலீஸ் எப்போதுமே அரசியல்வாதிகள் பக்கம் தான். நீதிமன்றங்கள் படு ஸ்லொ . மொத்தத்தில் வெகுஜன வாழ்க்கை சிக்கல் தான்.


சுராகோ
ஆக 16, 2024 19:08

இப்பொழுதாவது எல்லோருக்கும் தெரிந்த உண்மையை வெளிப்படையாக சொன்னீர்களே


Anand
ஆக 16, 2024 19:04

அதாவது மக்களை ரவுடி, திருடன் போன்ற சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டிய போலீசாரே அவர்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டிருப்பதாக நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை