உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏக்கம், கனவுகளிலேயே காலம் கடந்து போய்விடக் கூடாது; விஜய்

ஏக்கம், கனவுகளிலேயே காலம் கடந்து போய்விடக் கூடாது; விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வறுமையின் பிடியில் சிக்கியுள்ள உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது,'' என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஈரோடு பிரசாரக் கூட்டம் தொடர்பாக சமூக வலைதளத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.

வெற்றி

அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம். அந்த வகையில் இன்று (டிச.,18) மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

நன்றி

இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த கட்சியினருக்கும், தன்னார்வலர்களுக்கும், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த போலீசாருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மீண்டும் சந்திப்போம்,வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழ்வேள்
டிச 18, 2025 20:51

தொட்ட பெட்டா ரோட்டு முட்டை பரோட்டா.


AaaAaaEee
டிச 18, 2025 20:07

கட்சி ஆரம்பிக்கணும் சம்பாதிக்கணும் டாடா காமிக்கணும்


Ramesh Sargam
டிச 18, 2025 20:01

பேச்செல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால், ஒருவேளை ஆட்சியில் அமர்ந்தால் அவர் பேசிய பேச்சின்படி நடந்துகொள்வாரா? இல்லை மற்ற திராவிட கட்சிகளைப்போல ஏமாற்றுவாரா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.


பிரேம்ஜி
டிச 18, 2025 19:46

தமிழக வெட்டி(ப் பேச்சு) கழகம்! கொள்கையில்லாமல் இருப்பதே இந்த தவெக கொள்கை! வாழ்க! வளர்க! தேய்க!


பாலாஜி
டிச 18, 2025 19:29

சினிமாவில் கதாநாயகனாக நடித்து வெள்ளை கருப்பு பணமாக சில கோடிகள் சம்பாதிப்பதைவிட அரசியல்வாதிகள் பல லட்சம் கோடி ரூபாய்கள் ஒவ்வொரு மாதமும் வெள்ளை கருப்பு பணமாக குவிப்பதை அறிந்து அதுபோல சம்பாதிக்க ஏக்கம் கனவுகளுடன் தவெக கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய்.


vivek
டிச 18, 2025 20:20

திருட்டு திராவிடம் ஊழல் பண்ணாத பணமா சொம்பு பாலாஜி


S Balakrishnan
டிச 18, 2025 19:25

ஏக்கம் கனவுகளிலேயே காலம் கடந்து போய் விடக் கூடாது இந்த வசனம் அறிக்கை விட்ட தவெக தலைவர் விஜய் க்கும் பொருந்தும்.


நாகா
டிச 18, 2025 19:08

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் கள்ள மவுனம் சாதித்த மிஷனரி வகையறா இது என்பது அப்பட்டமாக தெரிந்த பின்னர், இந்துக்கள் ஒற்றுமை குறித்து மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது புலனாகிறது.


Mario
டிச 18, 2025 18:59

தவெகவில் இருந்து லட்சிய ஜனநாயக கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி அட.. நெஞ்சுல விஜய் டாட்டூ போட்டாரே


vivek
டிச 18, 2025 20:22

லண்டன் முட்டு சந்துல நல்லா கதறிய மரியோ


சந்திரன்
டிச 18, 2025 18:53

எழுதி தந்ததை நல்லா வாசித்தீர்தள் உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் இந்த ஏழை மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்த நன்மைகளை பட்டியல் செய்துவிட்டு அப்புறம் பேசலாம். வெறும் வாயால வட சுடுவது மக்களுக்காக என பொய்யுரைத்து பதவிக்கு அதுவும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது திராவிட மாடல் அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டீங்க


Shekar
டிச 18, 2025 18:19

இன்றைய கூத்து இத்துடன் முடிவடைகிறது. மீண்டும் வரும் பிப்ரவரி 30 ல், அடுத்த கூத்தில் தளபதியை சந்திப்போம் நன்றி வணக்கம்.


புதிய வீடியோ