உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரக்கு ரயில் மீது மோதியது எக்ஸ்பிரஸ் ரயில்; பெட்டிகள் தீப்பற்றியதால் அச்சம்!

சரக்கு ரயில் மீது மோதியது எக்ஸ்பிரஸ் ரயில்; பெட்டிகள் தீப்பற்றியதால் அச்சம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்தன. இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளதுமைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் (எண் 12578) ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. மணிக்கு 90 கி.மீ., வேகத்தில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்த போது ,லூப்லைனில் நுழைந்து, எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rw0qiukj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரயில்கள் மோதிய வேகத்தில் பயணிகள் ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டது. அவற்றில் 2 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. விபத்து நிகழ்ந்த இடம் இருட்டு நிறைந்த பகுதி என்பதால் என்ன நடந்தது என்பதை பயணிகள் உணர முடியாத நிலை காணப்பட்டது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது. இரவு நேரமானதால், தீயை அணைப்பதில் சிரமம் உள்ளதாக தெரிகிறது.விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்களும், உள்ளூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். மேலும், இதுபற்றிய விவரத்தை அங்குள்ள மக்கள் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.அதைத் தொடர்ந்து ரயில்வே உயரதிகாரிகளும், ரயில்வே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.விபத்து நடந்த இடத்தில் கலெக்டர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

ரயில்கள் தாமதம்

இந்த விபத்து காரணமாக, நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்கள் கிளம்பவில்லை.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சாண்டில்யன்
அக் 12, 2024 00:12

நானும் எத்தனையோ ரயில் விபத்துகளை கண்டவன்தான் இத்தனை அவகேடுகளைக் கண்டதேயில்லை

ஆரூர் ரங்
அக் 12, 2024 09:21

நிறைய விபத்துக்களை கண்டவர் ரயில் பயணங்களைத் தவிர்க்கலாம். உங்க ராசியால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்கும்.

சாண்டில்யன்
அக் 12, 2024 00:11

மக்களின் சொத்து இப்படி கோடி கோடியாய் போய்க் கொண்டிருக்கிறது ஒரு மின்சார எஞ்சின் என்ன விலை? ஒவ்வொரு ரயில் பெட்டியும் AC NON AC என்ன விலை ? கவலைப் பட யாருமில்லை பழிபோட இருக்கவே இருக்கான் முஸல்மான் திருட்டு திராவிடம் அது இதுன்னு உளறிட்டு கடந்து போய்விடலாம்.

சாண்டில்யன்
அக் 12, 2024 00:01

நடப்பவை எல்லாமே ஒரே மாதிரியாக ரயில் நிலையங்களின் அருகேதான் நிற்கும் ரயிலில் மோதும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள். விபத்து மீட்பு குழு ACCIDENT RELIEF MACHANISM என்ன ஆனதோ. ரயில்வே ஆஸ்பத்திரியை மூடவேண்டும் என்றார்கள் அதுபோல இதையும் சிக்கன நடவடிக்கையாக ஒழித்துக் கட்டி விட்டார்களோ?ரயில்வேயின் மீட்பு படைத்தான் கடைசியாக வருமா? ப்ளட் லைட்டுகள் வரவில்லை இருளில் துழாவிப் கொண்டுள்ளார்கள். ஊர் மக்களும், மாநில அரசும் தேசிய மீட்பு படையும் வருகிறார்கள் அவைகள் கால்வாசிதான் உதவும் முக்கால்வாசி ரயில்வேயின் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் அதிகாரிகளால்தான் முடியும். யாராவது ரயில்வேக்கு பொறுப்பிலுள்ளார்களா? இந்த விபத்து சம்பவங்கள் அவர்கள் கண்ணில் பட்டதா, காதில் விழுந்ததா தெரியவில்லை? ரயில்வே ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக இருக்க முடியாது அது ராணுவத்துக்கு நிகரானது என்பது இவர்களுக்கு எப்போது புரியுமோ தெரிய வில்லை. மனம் பொறுக்காமல் பதறுகிறதால் ஏதேதோ கொட்டி தீர்த்து விட்டேன்.

Ramesh Sargam
அக் 11, 2024 22:53

ஏன் இவ்வளவு ரயில் விபத்துக்கள்... இந்தியாவில் சமீபகாலங்களில்? வெளி நாட்டினர் சதியா அல்லது உள்நாட்டு தேசதுரோகிகள் செயலா????

Visu
அக் 11, 2024 22:39

தொடர்வண்டி விபத்து எளிதான டார்கட் அமைதி மார்கத்திற்கு

S. Authilingam
அக் 11, 2024 22:16

பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி வந்தே பாரத் ரயிலுக்கு நன்றாக கொடி ஆட்டும் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று நக்கல் செய்து கொண்டிருப்பவர்கள் அவரது சீர்மிகு ஆட்சி காரணமாக, 5 வருட காலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த 200 ரயில் விபத்துக்களில் 145 தடம் புரண்டு விபத்துகள். இதில் எந்தவொரு உயிர் சேதமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பயணிகள் பயணம் செய்த பெட்டிகளை விட்டு விட்டு எஞ்சின் மட்டுமே தனியாக சென்றது கடைசி 2 பெட்டிகள் தனியாக நின்றது போன்று காமெடிவகை எல்லாம் வேறு வகை.

பாமரன்
அக் 11, 2024 22:03

மோசமான மாலை சம்பவங்கள் தொடர்கிறது... நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது நூறு கிமீ வேகத்தில் வந்த விரைவு ரயில் மோதியதாக தகவல்கள் வருகின்றன. இது உண்மைன்னா பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம்... உயிரிழப்புகள் இருக்காது என நம்புவோம்... பிரார்த்திப்போம்

Ramesh Sargam
அக் 11, 2024 21:59

Today one air accident averted in Tiruchi. All passengers safe. An hour ago a major train accident near Tiruvallur, Tamil Nadu. No casualty so far. What’s happening in India and tamil nadu ?

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை