உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது; நயினார் நாகேந்திரன்

நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் அறிவாலயம் எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட ரவிக்குமார் என்ற தூய்மைப் பணியாளர், மிகுந்த மன உளைச்சலின் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளும் அரசின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் பல அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது.தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்த மக்கள் விரோத அரசை இனி எதிர்க்க முடியாது என நம்பிக்கையிழக்கும் சாமானியர்கள், தற்கொலையைத் துணையாக நாடுவது மனித இனத்திற்கே ஆபத்தானது. தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் அறிவாலயம் எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

nisar ahmad
டிச 21, 2025 10:23

வெரிகுட் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜக என்ற நச்சுக்கொடியை தமிழகத்தில் பரவ விடாமல் பார்த்துக்கொள்ளவும்.


பிரேம்ஜி
டிச 21, 2025 07:27

ஒன்றும் செய்ய முடியாது! இந்துக்கள் மீண்டும் திராவிட ஆட்சியையே கொண்டு வருவார்கள்! கூட்டணி அமைக்க திறமையற்ற நபர் பேசுகிறார்!


Yaro Oruvan
டிச 20, 2025 22:20

உண்மை ... தீயமுக தமிழக கேன்சர் ... உடனடி ட்ரீட்மெண்ட் தேவை .. தமிழகம் காப்பாற்றப்பட தீயமுக வேரோடு புடுங்கி எறியப்படவேண்டிய விஷ செடி


Ramesh Sargam
டிச 20, 2025 21:37

படர்ந்துவிட்டது. இனி அது மேலும் படராமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும். வரும் 2026 தேர்தலில் யோசித்து ஒரு நேர்மையான கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, ஆட்சியில் அமர்த்தவேண்டும். நஞ்சுக்கொடியும் படரக்கூடாது, அந்த கருப்பு, சிகப்பு கொடியும் பரக்கக்கூடாது.


Oviya Vijay
டிச 20, 2025 21:27

படர விட மாட்டோம்.


NRajasekar
டிச 20, 2025 20:28

நச்சு. கொடி விஷ விருட்ஷம் இனியும் ஆட்சியில் தொடரகூடாது


Anantharaman Srinivasan
டிச 20, 2025 19:11

திமுக நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது சரி 100% உண்மை. அண்ணாமலை தலைவராகயிருந்தபோது இருந்த பாஜக எழுச்சி, உங்க தலைமையில் இப்போ குறைந்து விட்டதே. அதுக்கென்ன பதில்..?


T.Senthilsigamani
டிச 20, 2025 18:03

அரச நாக நச்சை விட கொடியது பாமர ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கொடுங்கோல் ஆட்சியாகும் . தமிழகம் இனியும் விடியா அரசின் மக்கள் விரோத கொள்கைகளை பொறுத்து கொண்டால் வரும் தலை முறையினர் நம்மை பழிப்பர் .


முருகன்
டிச 20, 2025 17:52

உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக............


vivek
டிச 20, 2025 18:41

ஒரு இருநூறு ரூபாய்க்கு முட்டு குடுக்கும் தற்குறி முருகன்


Chandru
டிச 20, 2025 19:26

People in TN arent ashamed to talk nonsense for an amount of Rs.200


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை