உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா; நயினார் கேள்வி

ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா; நயினார் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் அறிவாலய அரசின் மதநல்லிணக்கமா என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றவிடாமல் தடுத்துவிட்டு, அதே மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ள திமுக அரசின் இந்துமத வெறுப்பு கடும் கண்டனத்திற்குரியது. ஹிந்துக்களின் நம்பிக்கைகள் என்பதையும் தாண்டி தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளைத் திமுக அரசு திட்டமிட்டு பறித்துள்ளதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.மத்திய பாதுகாப்புப் படையினருடன் குறிப்பிட்ட சிலர் மட்டும் மலைமீது சென்று தீபமேற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிடும் என மிகைப்படுத்தி நீதிமன்ற உத்தரவையும் மீறி தடை உத்தரவு பிறப்பித்த திமுகவின் ஏவல்துறை, நேற்று இரவோடு இரவாகத் திருப்பரங்குன்ற மலையின் மீதுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்காகக் கொடியேற்றுவதற்கு மட்டும் எப்படி பாதுகாப்பு அளித்தது?ஓட்டு வங்கிக்காகத் திமுக தலைவர்கள் முன்னெடுக்கும் பிளவுவாத அரசியலில் அரசு அதிகாரிகளும் பங்குதாரர்களாக மாறிவிட்டனரா? இஸ்லாமிய சகோதரர்கள் அவர்களின் விழாக்களைக் கொண்டாடுவதில் இந்துக்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை, ஹிந்துக்கள் திருப்பரங்குன்ற மலைமீது தீபமேற்றுவதில் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. ஆனால், திருவிழாவில் கைகலப்பு ஏற்பட்டால் திருடனுக்குக் கொண்டாட்டம் என்பது போல அமைதியாக நடக்க வேண்டிய அவரவர் மத விழாக்களில் திமுக எதற்கு உள்ளே புகுந்து குட்டையைக் குழப்புகிறது?சகோதரத்துவத்துடன் பழகிவரும் இரு சமூகத்தினரிடையே எப்படியாவது மதக்கலவரம் வரவேண்டும், அதை வைத்து அடுத்த முறை அரியணை ஏற வேண்டும் என்ற தீய எண்ணமா?இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Nagarajan S
டிச 22, 2025 19:48

திமுகவில் உள்ள இந்து சகோதர, சகோதரிகள் உண்மையில் இந்துக்களுக்கும் இந்துமத விழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு ஆதரவாக இருப்பவர்களாக இருந்தால் நிச்சயம் வரும் தேர்தலில் இந்து விரோத திமுக விற்கு ஓட்டளிக்க மாட்டார்கள்.


பேசும் தமிழன்
டிச 22, 2025 19:29

அவர்கள் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தெரிந்தும்.... அவர்களுக்கு ஓட்டு போடும் நம்ம ஆட்களை என்னவென்று சொல்வது.... திருந்த வேண்டியது அவர்கள் அல்ல.... அவர்களுக்கு ஓட்டு போடும் தமிழக இந்துக்கள் தான் !!!


G Mahalingam
டிச 22, 2025 19:23

கடந்த 60 ஆண்டுகளாக திக, திமுக எப்போதும் பிராமணர் மற்றும் பிராமணர் இல்லாதவர் என்று பிரித்து வோட்டு வாங்கினார்கள். தமிழ் நாட்டில் 95 சதவீதம் பேருக்கு இட ஒதுக்கீடு இருக்கு. 2 சதவீதம் பிராமணர் மற்றும் 3 சதவீதம் உயர் சாதியினர். மற்ற 15 சதவீதம் உயர் சாதியினர் உட்பிரிவு சாதிகளை வைத்து பிற்படுத்தப்பட்ட வராக ஆகி விட்டனர். முதல் தடவை கருணாநிதி பதவியில் இருந்த போது நடந்து விட்டது . ஆனால் பிராமணருக்கு மட்டுமே உட் பிரிவு கிடையாது. அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களாக ஆக முடியாது. இதனால் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கிறார். இப்போது இந்துக்கள் விழித்து கொண்டு விட்ட படியால் இந்துக்கள் இஸ்லாமியரின் பகையை உண்டாக்கி ஒட்டு மொத்த சிறுபான்மையினர் வோட்டு மற்றும் திமுகவின் யின் வோட்டை வாங்க பார்க்கிறார்.


Sun
டிச 22, 2025 18:27

நயினார் சொன்னதில் ஒரு சிறு திருத்தம். ஒரு கண்ணில் சுண்ணம்பு இன்னொரு கண்ணில் ஆசிட் !


R Dhasarathan
டிச 22, 2025 18:23

எல்லாம் எங்கள் தலையெழுத்து, அரசியல் செய்யத் தெரியாதவர்கள் பின் இந்த தேசிய கட்சியின் நிலையை பார்க்கும் போது, திமுகவே தேவலாம் போல் உள்ளது...


Nava
டிச 22, 2025 18:04

இந்து விரோதி என்று திராவிட மாடல் கொம்பனின் செயல்கள் பட்டவர்தனமாக சொல்கிறது . இந்துக்கள் விழித்து எழாது வரை ஒன்றும் செய்ய முடியாது


Nava
டிச 22, 2025 18:04

இந்து விரோதி என்று திராவிட மாடல் கொம்பனின் செயல்கள் பட்டவர்தனமாக சொல்கிறது . இந்துக்கள் விழித்து எழாது வரை ஒன்றும் செய்ய முடியாது


Namasivayam
டிச 22, 2025 18:02

மிளகாய் பொடி


Namasivayam
டிச 22, 2025 18:01

இல்லை மிளகாய்ப்பொடி தான் இந்துக்களுக்கு


ராமகிருஷ்ணன்
டிச 22, 2025 17:59

திமுகவில் இருக்குற இந்துக்களுக்கு வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணை எதுவுமே கிடையாது உப்பு போட்டு சோறு திங்கிறதும் கிடையாது. மற்ற கட்சிகாரர்கள் எவ்வளவு கேவலமாக திட்டினாலும் திமுகவினர் யோசிக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அறிவு மழுங்கிய ஜென்மங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை