உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டமளிப்பு விழாவில் பாலிடிக்ஸ்; கவர்னர் பிரசன்ட் அமைச்சர் ஆப்சென்ட்

பட்டமளிப்பு விழாவில் பாலிடிக்ஸ்; கவர்னர் பிரசன்ட் அமைச்சர் ஆப்சென்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றதால் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் புறக்கணிப்பு

தமிழக அரசியலில் கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களில் வேந்தராகவும் உள்ளார். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவது என்பது மரபு. ஆனால் ஆர்.என். ரவி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவை தி.மு.க.,வின் துறை அமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

பட்டமளிப்பு விழா

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஏற்கனவே இதுபோன்று புறக்கணித்துள்ளனர். அந்த பட்டியலில் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் 2வது முறையாக இணைந்துள்ளார். கோவையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிலையில், இணை வேந்தர் ஆன அமைச்சர் விழாவை புறக்கணித்துள்ளார். 2வது ஆண்டாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.

எதிர்பார்ப்பு

இம்மாத இறுதியில் சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த விழாவிலும் துறை அமைச்சர் கலந்து கொள்வாரா அல்லது வழக்கம் போல் புறக்கணிப்புதானா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

veeramani
செப் 09, 2024 17:18

பட்ட மேற் படி ப்பு படித்திருந்தால் நிச்சயம் அருமை தெரிந்துஇருக்கும்


அருணாசலம்
செப் 09, 2024 20:22

பள்ளிப் படிப்பு முடித்தவரா?


Mettai* Tamil
செப் 09, 2024 15:27

எல்லாம் நன்மைக்கே .....


N.Purushothaman
செப் 09, 2024 14:25

இப்படிப்பட்ட ஆளுங்களை எல்லாம் தலை முழுகியாகிடுச்சி ....


swamy
செப் 09, 2024 13:41

விட்டது ________ என்று போய் விடலாம்.


T.sthivinayagam
செப் 09, 2024 12:29

தமிழக பாஜகாவில் சரியான தலைவர்கள் இல்லாதையே காட்டுகிறது கவர்னரை வைத்து பாஜக அரசியல் செய்யும் நிலமை்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 09, 2024 12:06

தாழ்வு மனப்பான்மை காரணமாக கூட கலந்து கொள்ளாமல் இருக்கலாம்.


அஸ்வின்
செப் 09, 2024 11:25

புறக்கனித்தால் ஒன்றும் நின்றுவிடாது


R.MURALIKRISHNAN
செப் 09, 2024 11:21

போலீசை பார்த்தால் ........னுக்கு பயம்கிறது இது தானா? நீங்க திருடன்னு நினைத்தால் நான் பொறுப்பல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை