உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு: அன்புமணி கண்டனம்

 டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு: அன்புமணி கண்டனம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆறு போட்டித் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: வரும் 2026ல் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான 'குரூப் -- 1' பணி, கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான 'குரூப் - 4' பணிகள் என, மொத்தம் ஆறு போட்டித் தேர்வுகள் மட்டும் அடுத்த ஆண்டில் நடத்தப்பட உள்ளன. இது போதுமானதல்ல. இந்த ஆண்டு, ஏழு வகை போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த து. அவற்றில் சில தேர்வுக ளை நடத்தி முடித்துள்ளது. அதன் வாயிலாக, 9,757 பேர் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வரும் 2026ல் அறிவிக்கப்பட்டுள்ள ஆறு போட்டித் தேர்வுகள் வாயிலாக, அதிகபட்சமாக 6,000 பேருக்கு கூட வேலை வழங்கப்படாது. 'ஆட்சிக்கு வந்தால், அரசு துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நி ரப்பப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்த நான் கு ஆண்டுகளி ல், 40,000 பேருக்கு தான் நிரந்தர அரசு வேலை கிடைத்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில், தி.மு.க., அரசு எந்த அளவுக்கு துரோகம் செய்துள்ளது என்பதற்கு இதுவே சான்று. இவ்வாறு அதில் கூ றப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ