உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.என்.பி.எஸ்சி., குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 காலி பணியிடம் சேர்ப்பு

டி.என்.பி.எஸ்சி., குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 காலி பணியிடம் சேர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது.இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 23 வகையான குரூப் 4 பதவிகளுக்கு, 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ) தேர்வு ஜூன் 9ம் தேதி நடந்தது. 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதினர். செப்., 11ல் கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன. கூடுதல் இடங்களை எதிர்பார்த்த தேர்வர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வந்தது. இம்மாதம் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்நிலையில், தற்போது குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதனால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது. இதற்கான விவரங்களை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சாண்டில்யன்
அக் 09, 2024 19:36

தங்கம் தென்னரசு, சங்கம் தொடங்குவது குறித்து வழக்கு நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.அதன் தீர்ப்பு வந்ததும் அதை நிறைவேற்றுவோம் என்றாரே கேட்க வில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை