UPDATED : ஜன 11, 2024 04:35 PM | ADDED : ஜன 11, 2024 01:59 PM
சென்னை: 6,151 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்கள், குரூப் 2ஏ பதவிகளில் 5,990 பணியிடங்கள் என மொத்தம் 6,151 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த 2021 பிப்ரவரியில் வெளியானது. இதற்கான முதனிலை தேர்வுகள் முடிந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 25ல் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டது.இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவித்தும் 11 மாதம் ஆகியும் வெளியிடப்படாமல் இருந்தன. இந்த நிலையில் மொத்தம் 6,151 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாகவே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.