உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீன்களில் விஷம் கலந்து வேட்டை மடியும் வெளிநாட்டு பறவைகள்

மீன்களில் விஷம் கலந்து வேட்டை மடியும் வெளிநாட்டு பறவைகள்

குஜிலியம்பாறை : திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணைக்கு, வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. மீன்களில் விஷம் கலந்து அவை வேட்டையாடுப்படுகின்றன. வேடசந்தூர் அருகே அழகாபுரி குடனாறு அணை, 27 அடி கொள்ளவு கொண்டது. கடந்த ஆண்டு அணை நிரம்பிய நிலையில், தற்போது 13.5 அடி தண்ணீர் உள்ளது. மீன் வளத்துறை சார்பில் மீன் வளர்க்கப்படுகிறது. நீர்காகம், முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகள் இங்கு உள்ளன. கோடைக்கு பின் உள்ள தட்பவெப்பதிற்காக கூழக்கடா, செந்நாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் கடல் கடந்து வந்துள்ளன.

நெருப்பு கோழிகளை போல், 2 முதல் 4 கிலோ வரை எடை கொண்ட இப்பறவைகள், தண்ணீர் குறைந்த பகுதிகளில் இரை தேடி செல்வதும்; காலை, மாலையில் மேட்டு நிலங்களில், கூட்டமாக நிற்பதும் கண்கொள்ளா காட்சி. இவற்றை வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது. வலை வீசி பிடிப்பது, சிறிய மீன்களில் விஷத்தை கலந்து பறவைகளை மயக்கம் அடைய செய்வது என, அட்டூழியங்கள் தொடர்கின்றன. விஷ மீனுக்கு சிக்கும் பறவைகளின் குடல் பகுதியை நீக்கி விட்டு, சமைத்து சாப்பிடுகின்றனர்.அணையின் மேற்கு பகுதி மறைவிடத்தில், ஏராளமான பறவைகள் கொல்லப்பட்டு, இறகுகள், குடல் கழிவுகள் தடயங்களாக குவிந்துள்ளன. இதை தடுக்காத பட்சத்தில் பறவைகள் வருகை குறைந்து, அணை களை இழக்க நேரிடும். அணை பகுதியில், கண்காணிப்பை தீவிரப்படுத்த, வனத்துறையினர் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை