உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி: ஸ்டாலின் வருகை

பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி: ஸ்டாலின் வருகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், இன்று அரசு விழாவாக, 117வது ஜெயந்தி, 62வது குரு பூஜை விழா நடக்கிறது.மதுரையில் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின், அதன் பின் காரில் பசும்பொன் வருகிறார். காலை 9:00 மணிக்கு மேல் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்துகிறார்.அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ., - காங்., - அ.ம.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

10,000 போலீசார் பாதுகாப்பு

தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்டம் முழுதும், 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பசும்பொன்னில், கண்காணிப்பு பணியில், ஆளில்லா விமானம், 19 ட்ரோன் கேமராக்கள், 90 இடங்களில் அதிநவீன கேமராக்கள உள்ளன. போலீசாரால் அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 30, 2024 09:53

சாதியை ஒழிச்ச ஈவேரா வழி வந்தவர்கள் சாதி ஓட்டுக்காக ஊ ஊ .....


Sundar R
அக் 30, 2024 09:41

தேர்தலிலும் தனியாக நிற்க யோக்கியதை இல்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் "தேசியமும், தெய்வீகமும் நம் இரு கண்கள்" என்று சொன்னதைக் கடைபிடிக்க யோக்கியதை இருக்கிறதா? யோக்கியதை தெரியாதவனிடம் ஆளும் கூட்டணி கட்சியினர் கூட்டணி வைக்கிறார்கள். யோக்கியதை இல்லாதவன் பசும்பொன்னிற்கு வந்து சம்பந்தமில்லாமல் ஆஜராகிறான். மக்கள் கேனையர்கள் அல்ல என்பதை இதுபோன்ற கழிசடைகள் புரிந்து கொள்ள வேண்டும்.


AMLA ASOKAN
அக் 30, 2024 09:28

கடவுளை வணங்கும் போதுதான் திருநீற்றை நெற்றியில் பூச வேண்டும் . முத்துராமலிங்கத் தேவர் ஒரு சாதாரண மனிதராக பிறந்தவர் தான் . அவர் எந்த இந்துமத பிரிவுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தெய்வம் அல்லது பசும்பொன் சாமியா ? இந்துமதத்தை நன்றாக புரிந்து கொண்டவர்கள் இது அரசியல் வழிபாடு , மதத்துக்கு அப்பாற்பட்டது , திருநீருக்கு அப்பாற்பட்டது என்பதை உணரவேண்டும் .


Barakat Ali
அக் 30, 2024 09:04

சிலை வணக்கம், அதை வைத்து உருவ வழிபாடு, அதுவும் மனிதராக வாழ்ந்து மறைந்த ஒருவருக்கு ???? இது இஸ்லாத் ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகும் ..... ஆனாலும் இஸ்லாமியர் வாக்குகளை பெருவாரியாக திமுக பெறுகிறது என்பது வியப்புக்குரியது .....


Kanagaraj M
அக் 30, 2024 09:02

மணலையும் மலையையும் திருட, மக்கள் ஓட்டு வாங்க, இல்லாத இனம் திராவிட இனம் நடிக்கும்.


krishna
அக் 30, 2024 08:50

INDHA KEVALA HINDHU VIRODHA MANIDHARUKKU ANUMADHI KODUTHAALUM VIBUDHI EEN KODUKKIRAARGAL.


HoneyBee
அக் 30, 2024 08:43

இந்த முறை திருநநீற்றை நெற்றியில் கட்டாயம் இடுவான். தேர்தல் வருதில்ல


N.Purushothaman
அக் 30, 2024 07:21

விபூதியை தட்டி விடும் படலம் நடக்கும் .....பிரிவினைவாத கட்சியான திருட்டு திராவிட கட்சியை அங்கு அனுமதிக்க கூடாது ...அல்லது தேசமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்கிற பசும்பொன்னாரின் கருத்தை மனமார ஏற்கிறேன் என்கிற உறுதிமொழியில் கையெழுத்து இட்ட பிறகே அனுமதிக்க வேண்டும் ...


Narayanan
அக் 30, 2024 06:53

தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தேவர் ஜெயந்திக்கு போகவும் . அரசியல் வாதிகள் தயவுபண்ணி நம்பிக்கை இல்லாதவர்கள் போகவேண்டாம் .


S. Gopalakrishnan
அக் 30, 2024 06:22

விபூதியை ஒழுங்காக நெற்றியில் இடவும். இட்டு விட்டு பிறகு அழிப்பது, கீழே போட்டு காலால் மிதிப்பது ஆகிய அவமரியாதை செய்ய வேண்டாம்.


முக்கிய வீடியோ