வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓம் துர்கா தேவி சரணம்
மேலும் செய்திகள்
நவராத்திரி எட்டாம் நாள்
10-Oct-2024
விஜயதசமியான இன்று மதுரை மீனாட்சியம்மன் வெற்றி தரும் விஜயாம்பாளாக சடையலம்புதல்அலங்காரத்தில் காட்சி தருகிறாள். தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று மகிஷாசுரன் வரம் பெற்றான். வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான். இதற்கு முடிவு கட்ட எண்ணிய சிவபெருமான், தன் ஆயுதமான திரிசூலத்தை அம்பிகைக்கு வழங்கினார். திருமால் உள்ளிட்ட தேவர்களும் தங்களின் ஆயுதங்களைக் கொடுத்தனர். சிங்கத்தின் மீதேறி புறப்பட்ட அவள் போரில் வெற்றி பெற்றாள். இதனால் விஜயதுர்கா, மகிஷாசுரமர்த்தினி எனப் பெயர் பெற்றாள். வெற்றிக்குரிய இந்த நாளே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.பாட வேண்டிய பாடல்மாலயன் தேட மறை தேட வானவர் தேட நின்றகாலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்புவேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளிநில் கண்டாய்பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே.
ஓம் துர்கா தேவி சரணம்
10-Oct-2024