உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு

40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல், 25 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும்.

இது குறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தமுள்ள சுங்கச்சாவடிகளில் 32 காலாவதியாகி விட்டன. அவற்றை மூடக்கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆண்டுதோறும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது. ஆனால், போதிய சாலை பராமரிப்பு பணிகள் இல்லாததால், விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. எனவே, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட, மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். ஏப்ரல் முதல் உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணங்களால், சரக்கு லாரிகளின் வாடகை கட்டணமும் கணிசமாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R.P.Anand
மார் 25, 2025 16:22

ரெண்டு பேரும் கூட்டு கொள்ளை. ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்


SP
மார் 25, 2025 09:20

ஏற்கனவே போடப்பட்ட சாலைகளுக்கு மீண்டும் சுங்கவரி அதிகம் என்றால். அரசின் மீது அதிருப்தி வருவதை தடுக்க முடியாது வெளிநாடுகளில் நல்ல பெயர் வாங்குவதில் உள்ள அக்கறை உள்நாட்டுகளில் இது போன்ற சமூகங்களால் வெறுப்பு தான் வரும்.


பாமரன்
மார் 25, 2025 08:46

இனி சொதந்தர தின உரையில் பிரதமர் நாட்டில் லிஸ்டில் லஞ்சம் ஊழல் கருப்பு பூச்சாண்டி ஒழித்தல் லிஸ்டில் சுங்கச்சாவடி கொள்ளை பெட்ரோலிய பொருட்கள் விலை கொள்கையையும் சேர்த்துக்கலாம்.. ஆங் டீம்கா ஒயிக கூட..


N Annamalai
மார் 25, 2025 07:53

இந்தியாவில் அதிகம் வரி சாவடிகள் இருப்பது தமிழகத்தில் மட்டும் .வண்டி எடுக்கவே பயமாக உள்ளது .பெட்ரோல் சாப்பாடு தவிர சாவடிக்கும் எடுத்து வைக்க வேண்டி உள்ளது .இருபத்திநாலு மணி நேர கொள்ளை .மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்துகிறார்கள் .மக்கள் பாவம் .


GMM
மார் 25, 2025 07:29

32 சுங்க சாவடி தமிழகத்தில் மட்டும் காலாவதி? தமிழக கோரிக்கை வினோதமாக இருக்கும். காலாவதி மாத்திரை, மருந்தை உபயோகிக்க கூடாது. காலாவதியான சாவடியை எப்படி உபயோகிக்க முடியும்? தேசிய சாலை போல் மாநில சாலைகள் 2 மடங்கு இருக்கும். மாநில சாலைக்கு வரி இல்லை? அதனை பயன்படுத்துக. சாலை பராமரிப்புக்கு சுங்கம் அவசியம். இதில் அதிக லாபம் என்றால் முதலீடு செய்து பங்கு பெறலாம். தேச வளர்ச்சியை தடுக்க புது கருத்து? சாலையை விலை பேசி தமிழகம் வாங்கி கொள்ள முடியும். சில மாநிலங்கள் நாட்டை திவால் ஆகிவிடும். ? தடுக்க சட்ட நடவடிக்கை தேவை.


Rajarajan
மார் 25, 2025 06:42

வோட்டு அரசியலுக்காக, நஷ்டத்தில் இயங்கும் அரசு / பொதுத்துறை நிறுவனங்களை இழுத்துமூடாவிட்டால், இப்படித்தான் ஆறு மாதத்திற்கு ஒருமுறை, அவர்களுக்கு இல்லாத பஞ்சத்திற்கு பஞ்சபடி வழங்க இப்படி ஏதாச்சும் விலைவாசி / வரி உயர்வு இருந்தே தீரும். இது நமது ஜனநாயகத்தின் சாபக்கேடு. எங்கே, தைரியம் இருந்தால், எந்த அரசியல் கட்சியாவது இதுகுறித்து வாய் திறக்க சொல்லுங்கள் பாப்போம் ?? பொருளாதாரம் , சிக்கனம், வரவு செலவு, அக்கறை இல்லாதவர்கள் மட்டும் தான் அரசியல்வாதியாக இருக்க முடியும். இல்லையேல் அவர்கள் நிர்வாகியாக தான் இருப்பர். அப்படி இருப்பின், திரு. காமராஜர் மற்றும் திரு. மன்மோகனை போல விலாசம் இல்லாமல் தான் போவார்.


vinoth kumar
மார் 25, 2025 05:10

மத்திய , மாநில அரசுகள் இலவசங்களை ஒழித்து, சுங்க சாவடிகளை மூடி , பெட்ரோல், டீசல், காஸ் விலைகளை குறைத்தால் , அனைத்து பொருளகளின் விலை குறைந்து , மக்களின் அடிப்படை செலவுகள் குறையும் , வாழ்வாதாரம் மேம்படும். இதை எந்த அரசும் செய்வதில்லை. இலவசங்கள் தங்கள் வாழ்வு செலவுகளை அதிகப்படுத்தும் என்பதை மக்களும் உணர்வதில்லை .


தமிழன்
மார் 25, 2025 04:48

இந்த பகல் கொள்ளையை விட மோசமான கொள்ளைக்கு ஒரு முடிவே கிடையாதா?? வரி...வரி...வரி.. இப்படி வெறி பிடித்து மக்களின் ரத்தத்தை உறுஞ்சும் கூட்டம் எத்தனை காலம் நன்றாக இருக்க முடியும்?? 60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பது விதிமுறை அதிலும் நியாயமான முறையில் வசூல் செய்ய வேண்டும் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது திருடாதே அரசே திருடாதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை