உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீனாவிலும் ராமாயணத்தின் சுவடுகள் ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்

சீனாவிலும் ராமாயணத்தின் சுவடுகள் ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்,: புத்த மத நுால்களின் வாயிலாக, ராமாயணம் தொடர்பான கருத்துக்கள், சீனாவில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்தது. இதன் வாயிலாக சீனாவில் ஹிந்து மதத்தின் தாக்கம் இருந்துள்ளது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவில் உள்ள இந்திய துாதரகம் சார்பில், ராமாயணம் தொடர்பான கருத்தரங்கம் பீஜிங்கில் நடந்தது. இதில் பங்கேற்ற பல சீன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சீனாவில், ராமாணயத்தின் சுவடுகள் இருந்ததாகக் கூறியுள்ளனர்.ஷின்குவா பல்கலைக்கழக சர்வதேச மையத்தின் தலைவர் டாக்டர் ஜியாங் ஜிங்குய் கூறியுள்ளதாவது:இந்தியாவின், குறிப்பாக ஹிந்து மதத்தின் மிகப் பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், பல நுாற்றாண்டுகளுக்கு முன், சீனாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக புத்த மத நுால்களின் வாயிலாக, ராமாயணம் சீனாவில் அறிமுகமானது. இது, சீனாவின் முக்கியமான ஹான் கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் கலாசாரம் குறித்த புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது.ராமாயணத்தில் உள்ள தசரசன், ஹனுமான் ஆகியோரின் பெயர்கள், இந்த கலாசாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

jayvee
நவ 04, 2024 11:18

CCP இடம் பணம் வாங்கிக் கொண்டு இந்தியாவை துண்டாட நினைக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இதர உதிரி கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளுக்கு இது பேட்டா வால் அடித்ததுபோல இருக்கும்..


வைகுண்டேஸ்வரன்
நவ 04, 2024 09:33

போங்கய்யா நீங்களும் உங்க கலாச்சாரமும்..


N Sasikumar Yadhav
நவ 04, 2024 11:17

மூர்க்கரே உங்க மதமாற்ற வியாபாரம் பாதிக்கிறதா . உலகம் முழுவதும் சனாதன தர்மம் யுத்தமின்றி பரவுகிறது அதனுடைய கலாச்சாரத்தால் பரவுகிறது


Seshadri
நவ 04, 2024 07:52

பாம்பன் கோவிலுக்கு சென்றேன்... அழகியமுருகன் சன்னதிக்குள் ஸ்வாமிக்கு எதிரில் தமிழக முதலமைச்சரின் படத்துடன் பெரிய பேனர்... புனித ஏசு கோவிலிலோ அல்லது மசூதியிலோ இது நடக்காது... மக்கள் குரல், எழுத்து சுதந்திரம் என கூவும் பத்திரிகை துரையின் செயலட்றதனம் எனவும் கூறலாமோ


subramanian
நவ 04, 2024 07:35

உலகம் முழுவதும் சிவலிங்கம் உள்ளது. உலகம் முழுவதும் ராமாயணம் மகாபாரதம் உள்ளது ஆனால் மறைக்கப்படுகிறது.


Kasimani Baskaran
நவ 04, 2024 05:19

திராவிடஸ்தான் தவிர அனைத்திலும் இராமபிரான் நீக்கமற நிறைந்து இருக்கிறார். இந்த சதுர் யுகத்தில் திரேதா - துவாபர யுக சந்தியில் நிகழ்ந்த இராமாயணம் உலகிலேயே மிக மிக பழமையான காவியம்.


புதிய வீடியோ