டூவீலரில் துண்டு சிக்கி வியாபாரி பலி
போடி: தேனி மாவட்டம் தேவாரம் டி.கே.வி., பள்ளி தெரு பழனிச்சாமி 75. வியாபாரி. இவர் நேற்று முன் தினம் டூவீலரில் தக்காளி பெட்டியை ஏற்றிக் கொண்டு போடி தேவாரம் செல்லும் ரோட்டில் சென்றார். டூவீலரில் அமர சீட்டில் வைத்திருந்த துண்டு வண்டியின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலை தடுமாறி பழனிச்சாமி ரோட்டின் கீழே விழுந்ததில், பலத்த காயம் அடைந்தார். தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.