உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரவு நேரத்தில் வாகன சோதனையில் போலீஸ்காரருக்கு நேர்ந்த சோகம்: காலையில் போன் செய்து குற்றவாளி வாக்குமூலம்!

இரவு நேரத்தில் வாகன சோதனையில் போலீஸ்காரருக்கு நேர்ந்த சோகம்: காலையில் போன் செய்து குற்றவாளி வாக்குமூலம்!

சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் வாகன சோதனையில் கார் மோதி கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து கார் டிரைவர் சாய்ராம் தவறை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை மடிப்பாக்கம் பகுதியில் நேற்று நள்ளிரவு 35 வயது கான்ஸ்டபிள் மேகநாதன் மற்றும் அவரது மூன்று சக போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி, சோதனையில் ஈடுபட முயன்றனர். காரை ஓட்டி வந்தவர் மது போதையில், கான்ஸ்டபிள் மேகநாதன் மீது மோதிவிட்டு, அவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார்.இதில் மேகநாதன்,35, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்தும், கார் டிரைவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை தலைமறைவான கார் டிரைவர் சாய்ராம், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தனது காரில் அடிபட்டு கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்ததாக வாக்குமூலம் அளித்து தவறை ஒப்புக்கொண்டார்.பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற, கார் டிரைவர் சாய்ராம் நடந்த சம்பவத்தை கூறி சரண்டர் ஆகியுள்ளார். இதனைத் தொடர்ந்து கார் விபத்து ஏற்படுத்திய சாய்ராம் (32) என்பவரை கைது செய்து அவர் மீது விபத்து ஏற்படுத்தி விட்டு ஓடுதல் பிரிவின் கீழ் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இரவு நேரத்தில் வாகன சோதனையில் கார் மோதி, கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
டிச 10, 2025 16:20

தவறை ஒப்புக்கொண்டதன் முக்கிய காரணம். 5 வருட சிறைத்தண்டனை கிடைக்கும். தங்க இடம், சாப்பாடு, உடை எல்லாம் இலவசம். அப்போ இந்த டிரைவர் செய்தது எளிதான வேலை, அவ்வளவு தான்.


Ajrjunan
டிச 10, 2025 15:25

உண்மையான குற்றவாளியை மறைக்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம். கொலை வழக்கில் கைது செய்து, தீவிர விசாரணை செய்து இறந்தவர் குடும்பத்துக்கு கொலையாளியிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொடுக்கவேண்டும்.


K.V.K.SRIRAM
டிச 10, 2025 13:26

வருத்தமான‌ சம்பவம். குற்றம் செய்த கார் ஓட்டுனர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட‌வேண்டும். வாகன தணிக்கை செய்யும்போது இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட‌வேண்டும். மறைந்த காவலர் மேகநாதன் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் அரசு செய்து தர‌வேண்டும்.


Ramesh Sargam
டிச 10, 2025 13:02

காவலரின் அகால மரணம் மனவருத்தமளிக்கிறது. விபத்தை ஏற்படுத்திய ட்ரைவர் தவறை ஒப்புக்கொண்டாலும், அவர் செய்த குற்றத்திற்காக சட்டத்தின்மூலம் தண்டனை அனுபவிக்கவேண்டும். தவறை அவரே ஒப்புக்கொண்டிருப்பதால், நீதிமன்றம் மேலும் சாட்சியங்கள் கோராமல், தண்டனையை உடனே நிறைவேற்றவேண்டும். மேலும் தமிழக அரசு பணியில் உயிரிழந்த அந்த காலவளர் குடும்பத்துக்கு நிதிஉதவியும், மற்றும் அவர் குடும்பத்தின் ஒருவருக்கு அரசு பணியும் கொடுத்து உதவவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை