உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கல்பட்டில் சோகம்; பைக் மீது கார் மோதி ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி

செங்கல்பட்டில் சோகம்; பைக் மீது கார் மோதி ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி

செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w5xxj4qt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பைக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியே வந்த கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற ஹரிதாஸ், மனைவி, குழந்தை உயிரிழந்தனர்.மற்றொரு சிறுவன் பலத்த காயம் அடைந்துள்ளான். அவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை