உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்காசியில் சோகம்! ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

தென்காசியில் சோகம்! ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: தென்காசி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்த வந்த 3 பேர் கெட்டுப்போன உணவு உண்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் வசித்து வந்த 11 பேருக்கு நேற்றிரவு உணவு அருந்திய பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r3x8wyt6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் சங்கர் கணேஷ், 48, முருகம்மாள்,45, அம்பிகா,40, ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரவு வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போயிருக்கலாம் அல்லது உணவு விஷத்தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான உணவுப் பாதுகாப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அம்பி அய்யர்
ஜூன் 13, 2025 06:55

அந்த இல்லத்துக்கு இன்னும் பெயர் வைக்கலியா.. அந்த இல்லத்தை நடத்துபவர் பெயர் என எதுவுமே வெளியிடப்படவில்லையே ஏன்?? அவர் ஹிந்து இல்லை என்பதாலா....??!!


D.Ambujavalli
ஜூன் 12, 2025 18:31

உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் தரத்தை சோதிக்கவே யாரும் காணோம் ஆதரவற்றவர்களுக்கு யார் பார்த்துப் பார்த்து உணவளிப்பார்கள்? அவர்களுக்கு கிடைக்கும் நிதியில் அமுக்கியது போக அழுகியது, கெட்டுபோனது, அரைகுறை வெந்தது என்று போட்டு முடித்துக்கொள்வார்கள் நல்ல மன நிலையில் உள்ளவர்கள் இந்த 40களில் இருப்பவர்களை இத்தகைய இல்லத்தில் சேர்த்திருக்க மாட்டார்கள்....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 16:24

கள்ள சாராயம் குடித்து இறந்திருந்தால் இன்னேரம் அரசு ஓடோடிவது நிவாரணம் வழங்கி இருக்கும் ..


Tiruchanur
ஜூன் 12, 2025 14:51

ஓம் ஷாந்தி. ஆனால் 48, 45, 40 வயசுக்காரர்கள் எப்படி "ஆதரவற்றவர்கள்" ஆக முடியும்? உழைக்கும் வயது தானே? இருந்தாலும், மனம் பதறுகிறது


Sreenivas Jeyaraman
ஜூன் 12, 2025 14:12

எந்த இல்லம் எனபெயர் தெரிவிப்பதில் ஏதேனும் விதி மீறல் உண்டா? இதில் மறைக்க என்ன இருக்கிறது?


sridhar
ஜூன் 12, 2025 19:14

ஊகிக்க முடியாதா .


sridhar
ஜூன் 12, 2025 12:53

நிச்சயமாக மத மாற்ற கும்பலின் இல்லம் தான். கருணை கிடையாது , மத மாற்றம் மட்டுமே .


Ramesh Sargam
ஜூன் 12, 2025 12:42

முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தில் இப்படி ஒரு கொடுமையா? சே ... சே ... என்னவொரு கொடுமை? இறந்தவர்கள் ஆதரவற்றவர்கள். சொந்தங்கள் யாராவது இருந்தால் முதல்வர் உடனே நிவாரண நிதி கொடுத்திருப்பார். அதை வாங்கக்கூட யாரும் இல்லையே. அந்த நிதியை யாருக்கு கொடுப்பது? கழக கண்மணிகள் யாருக்காவது கொடுக்கலாம்.


Raghavan
ஜூன் 12, 2025 13:50

இந்நேரம் கழக கண்மணிகள் இறந்தவர்களின் வாரிசுதாரர்களை எப்படியும் கண்டுபிடித்து கருணைத்தொகையை பெறுவதற்கு முயற்சிப்பார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்கிற வசனத்திற்கு ஏற்ப ஆள் மாறாட்டங்கள் செய்து எப்படியும் இந்த ஆட்சி முடிவதற்குள் பணத்தை பெற்றுவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மாதிரி வேளைகளில் கழக கண்மணிகள் கில்லாடிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை