உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிணற்றில் விழுந்த சிறுமி பலி விக்கிரவாண்டி அருகே சோகம்

கிணற்றில் விழுந்த சிறுமி பலி விக்கிரவாண்டி அருகே சோகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 42; கூலித் தொழிலாளி. இவரது மகள் இந்துஜா, 9; அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் தனது சகோதரிகள் கிவினிஸ்ரீ, 16; ஜெயஸ்ரீ, 13; ஆகியோருடன் அதே பகுதி வயல் ெவளியில் உள்ள பம்பு செட்டில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக இந்துஜா கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். உடன் சென்ற சகோதரிகள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம், பக்கத்தினர் திரண்டு கிணற்றில் குதித்து தேடியும் கிடைக்கவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 5 மோட்டார் உதவியுடன் கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி, ஐந்தரை மணிநேரத்திற்குப் பின் 8:30 மணியளவில் சிறுமி இந்துஜா உடலை மீட்டனர். இதுகுறித்து பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை