உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றவாளியைத் தேடிச்சென்ற போது பரிதாபம்: பெண் போலீஸ் இருவர் பலி

குற்றவாளியைத் தேடிச்சென்ற போது பரிதாபம்: பெண் போலீஸ் இருவர் பலி

சென்னை: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே கார் மோதிய விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற மாதவரம் போலீஸ் ஸ்டேஷன் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ, கான்ஸ்டபிள் நித்யா உயிரிழந்தனர்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே, கார் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஸ்கூட்டரில் சென்ற மாதவரம் போலீஸ் ஸ்டேஷன் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ, கான்ஸ்டபிள் நித்யா ஆகிய இருவர் பலத்த காயமுற்றனர்.சம்பவ இடத்திலேயே ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் நித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளியைத் தேடி சென்ற போது விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த பெண் போலீஸ் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathyanarayanan Sathyasekaren
நவ 04, 2024 20:03

போலீஸ் துறையை நிர்வகிக்கும் தமிழக முதல்வர் இதற்க்கு என்ன சப்பைக்கட்டு சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கிறோம்.


N Sasikumar Yadhav
நவ 04, 2024 11:29

இவர்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் . இருசக்கர வாகனத்தில் நீண்டதூர பயணம் அவசியமா என நினைக்க வேண்டும் ஏன் காவல்நிலையத்தில் ஜீப் இல்லையா . உயிரிழந்த காவல்துறையை சேர்ந்த குடும்பங்களுக்கு இறைவன் தைரியம் கொடுக்கட்டும் . சர்வம் கிருஷ்ணார்ப்பணம்