உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூரில் துயர சம்பவம்: லாரி மீது பைக் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

ஓசூரில் துயர சம்பவம்: லாரி மீது பைக் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர்;ஓசூரில், லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த, 3 மாணவர்கள் பலியாகினர். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மிடுகரப்பள்ளியை சேர்ந்தவர் மோகன்பாபு. செவன்த் டே தனியார் பள்ளியில் வாகன கிளீனராக உள்ளார். இவரது மகன் ஹரிஸ், 14, அத்திவாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி வீரேந்திரசிங் மகன் ஆரியான்சிங், 13, செவன்த்டே பள்ளியில் 8ம் வகுப்பும், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவில் பூசாரி ஜெகநாதன் மகன் மதன், 14, என்பவர், 9ம் வகுப்பும் படித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zb2f28pf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று மதன் பள்ளிக்கு செல்லவில்லை. மாலை, 4:00 மணிக்கு மேல் பள்ளி முடிந்தவுடன் நண்பர்களான ஹரிஸ், ஆரியான் சிங் ஆகியோரை தன் தந்தையின் டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் அழைத்து கொண்டு, அத்திவாடி கூட்ரோட்டில் இருந்து, மத்திகிரி கூட்ரோடு நோக்கி பைக்கை ஓட்டி சென்றார். மாலை, 4:30 மணிக்கு, செவன்த்டே பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது, பைக் மோதியது. இதில், மதன் மற்றும் ஆரியான் சிங் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஹரிஸ், மத்திகிரி கூட்ரோடு அருகே தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.சாலையோரம் எந்த சிக்னலும் இல்லாமல் லாரியை நிறுத்தியிருந்த கேரள மாநிலம், பாலக்காடு அருகே அப்புனி பரோலி பகுதியை சேர்ந்த டிரைவர் ரவி, 50, என்பவரை, மத்திகிரி போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
ஜூலை 15, 2025 06:41

சாமியோவ்.. லைசென்ஸ் இருக்கா வண்டியை ஓட்ட இவர்களுக்கு, ஹெல்மெட் போட்டு இருந்தார்களா.. பெற்றோர்கள் சிறுவர்களுக்கு வண்டியை கொடுத்தது சரியா. .இவற்றைப்பற்றி எழுதுங்க


KM
ஜூலை 14, 2025 22:19

சட்டப்படி 18 வயதுக்கு குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் கைது செய்ய படுவார்கள் . லாரி ஓட்டுநர் ஒரு குற்றமும் செய்யவில்லை. பாவம் மாணவர்கள் . ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.


Balasubramanian
ஜூலை 14, 2025 22:09

லைசென்ஸ் எடுக்க சிறுவர்களுக்கு வயது போதாது! லைசென்ஸ் இல்லாத அவர்களுக்கு வண்டி சாவியை கொடுத்த, அல்லது சிறுவர்களின் பிடிவாதத்திற்கு இணங்கிய பெற்றோரைச் சொல்ல வேண்டும்! ஒரு விதத்தில் பார்த்தால் சட்டபடி அவர்களும் குற்றவாளிகளே!!


அப்பாவி
ஜூலை 14, 2025 22:08

அப்பனை கைது செய்து மூணுவருஷம் ஜெயில்ல போடணும்.


Ramesh Sargam
ஜூலை 14, 2025 22:07

அப்பாச்சி பைக் ஒரு பளுவான பைக். அதை சிறுவர்கள் ஓட்டக்கொடுத்த தாய்தந்தையர்களை முதலில் தண்டிக்கவேண்டும். அதுவும் ஒரு பைக்கில் மூன்று பேர்.


m.arunachalam
ஜூலை 14, 2025 21:52

14 வயசு பையன் அப்பாச்சி பைக் 3 பேர் எதை யாரிடம் நிரூபிக்க. தெளிதல் நலம்.


theruvasagan
ஜூலை 14, 2025 22:09

விடலை பசங்களிடம் பைக்கை ஓட்ட அனுமதிக்கும் அப்பன்காரன்களை படிச்சே.உள்ளே போடணும்.


m.arunachalam
ஜூலை 14, 2025 21:50

மாலை நேரத்தில் வாகனத்திற்கு என்ன சிக்னல் . 14 வயசு பையன் அப்பாச்சி பைக், 3 பேர் மற்றும் ஓட்டிய வேகம். தெளிதல் நலம்.


SANKAR
ஜூலை 14, 2025 21:34

all three minors three rode in single two wheeler dasshed against stopped lorry w at 4.45 when there was DAY LIGHT.It is insane to arrest lorry driver for causing accident.thst moped should have been driven in highest speed.otherwise three dying on dashing with stationery lorry is IMPOSSIBLE


சமீபத்திய செய்தி