வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Max 10 Hrs only in excigenious condtion Some one willing to work for oT . Any way Safty to be ensured
சென்னை: ரயில்வேயில் நாடு முழுதும், 50,000க்கும் மேற்பட்டோர், ரயில் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், தொடர் இரவு பணி, கூடுதல் பணிச்சுமை போன்றவற்றால், ரயில் ஓட்டுநர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, எட்டு மணி நேரம் பணி என்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர் இரவு பணியை தவிர்க்க வேண்டும். அனைத்து ரயில் இன்ஜின்களிலும், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, ரயில் ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, ரயில் ஓட்டுநர்கள் கூறுகையில், 'ரயில் ஓட்டுநர்கள் தற்போது 12 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து, நான்கு இரவு பணிகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஓட்டுநர்கள் சோர்ந்து போகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்' என்றனர்.
Max 10 Hrs only in excigenious condtion Some one willing to work for oT . Any way Safty to be ensured