உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சென்னை உட்பட 48 நகரங்களில் ரயில்கள் இயக்கம் இரட்டிப்பாகும்

 சென்னை உட்பட 48 நகரங்களில் ரயில்கள் இயக்கம் இரட்டிப்பாகும்

சென்னை: 'மும்பை, டில்லி, சென்னை உட்பட நாடு முழுதும், 48 முக்கிய நகரங்களில், ரயில்கள் இயக்கம், வரும் 2030ல் இரட்டிப்பாகும்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுதும், கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கான கட்டமைப்பு பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 48 முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. டில்லி, மும்பை, கொல்கட்டா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, பாட்னா, லக்னோ, புனே, நாக்பூர், வாரணாசி, அயோத்யா, ஆக்ரா, இந்துார், கொச்சி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, மைசூர், கோவை உட்பட முக்கிய ரயில் நிலையங்கள், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ன. மேற்கண்ட ரயில் நிலையங்களின் அருகில், புதிய ரயில் முனையம் உருவாக்குதல், கூடுதல் நடைமேடைகள் அமைப்பது, கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை, வரும் 2030க்குள் முடிக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டு உள்ள அறிவிப்பு: நாடு முழுதும் ரயில் பயணியரின் தேவையை பூர்த்தி செய்ய, அனைத்து வகையான கட்டமைப்புகளையும் ரயில்வே மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தேர்வு செய்யப்பட்ட, 48 முக்கிய நகரங்களில் நடக்கும் பணிகள், வரும் 2030ல் முடியும்போது, ரயில்கள் இயக்கம் இரட்டிப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ