உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயில்வான் வேடம்

பயில்வான் வேடம்

பயில்வான் வேடம்

போடுகிறார் பழனிசாமி

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த பழனிசாமி, சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் காலி இருக்கைகளை பார்த்து பேசிய வீராதி வீரன்; காற்றோடு கத்தி சண்டை போட்டவர். இன்று வெட்டி வசனம் பேசுகிறார். கூவத்துாரில் ஊர்ந் தெடுக்கப்பட்டு டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர். சட்டசபையில் வெளிநடப்பு செய்து, வீர வசனம் பேசுகிறார். இறந்தோரை வைத்து, அற்ப அரசியல் செய்கிறார். கரூரில் 41 பேர் இறப்பில், கூட்டணி அரசியல் செய்யும், கேடுகெட்ட அரசியல்வாதியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. பா.ஜ., அடிமையான பழனிசாமி, தனக்கொரு அடிமை சிக்க மாட்டாரா என தவம் கிடப்பது, அவரது தவிப்பிலேயே தெரிகிறது. 'வாட்ஸ் ஆப்' வதந்திகளை மட்டும் நம்பி வாழும் பழனிசாமிக்கு உண்மை என்ற வார்த்தையை கூட உச்சரிக்க தகுதியில்லை. தமிழக மக்களிடம் அவரது மயான அரசியல் எடுபடாது. -ரகுபதி தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நாநி
அக் 17, 2025 15:38

இவன்தான் கேடுகெட்ட ஓநாய் பிணம்திண்ணி கழுகு


மணி
அக் 17, 2025 13:41

காண்டாகுது


S.L.Narasimman
அக் 17, 2025 12:35

கொத்தடிமையாய் இருந்து மற்றவங்களை கேலி பேசுறார்


D Natarajan
அக் 17, 2025 06:05

இவரெல்லாம் ஒரு அமைச்சர். பேசத்தெரியாத கேடுகெட்ட அறிவிலி. 2026 ஒன்று தான் வழி


Mani . V
அக் 17, 2025 03:51

ஜெ. ஜெயலலிதா கல்லூரி ஓனர் ஆகிய இந்த ரகுபதி சீமானுக்கு முன்பே பைத்தியம் ஆகி விட்டார். பழனிசாமி பயில்வான் இல்லைதான். பதினெட்டு வயது இட்லி கடை படத் தயாரிப்பாளர் இவருக்கு வருங்கால தலைவர், உலகை ரட்சிக்க வந்த மீட்பர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை