உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிட்டல் கைது செய்ய லக்னோவில் பயிற்சி: கைதான பெண் வாக்குமூலம்

டிஜிட்டல் கைது செய்ய லக்னோவில் பயிற்சி: கைதான பெண் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ஆன்லைன் வாயிலாக டிஜிட்டல் கைது செய்து, பண மோசடி செய்வது தொடர்பாக, உ.பி., மாநிலம் லக்னோவில் பயிற்சி அளித்தனர்' என, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.வேலுாரைச் சேர்ந்த 66 வயது நபரை, ஆன்லைன் வாயிலாக மர்ம நபர்கள் 'டிஜிட்டல் கைது' செய்து, 81.68 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது குறித்து, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீசார் விசாரித்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஷோபனா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

போலீசாரிடம் ஷோபனா அளித்துள்ள வாக்குமூலம்:

என் சகோதரர் சுரேஷ், ஆன்லைன் விளையாட்டிற்கு வங்கி கணக்கை வாடகைக்கு விட்டால், கமிஷன் தொகை கிடைக்கும் என்று ஆசைகாட்டினார். ஆனால் அவர், சைபர் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்து உள்ளார். அவர்களுடன் சேர்ந்து மோசடி செய்யும் பணத்தை பெற, என் வங்கி கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். என் கணவர் கார்த்திக், மாற்றுத்திறனாளி. நாங்களும் கமிஷன் தொகைக்கு ஆசைபட்டு, சைபர் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்து வந்தோம். எங்களுடன் சேர்ந்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை தீவன வியாபாரி செந்தில்குமாரும் மோசடியில் ஈடுபட்டு வந்தார். எங்களுக்கு பியுஷ் என்பவர் தலைவராக செயல்பட்டு வந்தார். மோசடி செய்யும் பணத்தில் எங்களுக்கு, 100 ரூபாய்க்கு 2 ரூபாய் என்ற விகிதத்தில் கமிஷன் தொகை கொடுப்பார்.என் கணவரை, உ.பி., மாநிலம் லக்னோ வரச் சொன்னார். அவர் மாற்றுத்திறனாளி என்பதால், லக்னோ செல்வது சிரமம். இதனால், எங்கள் கும்பலில் பிரபு என்ற நபர் உள்ளார். அவர் ஓட்டுநர் என்பதால், அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று வருவார்.அவரை லக்னோ அனுப்பினோம். ஆன்லைன் வாயிலான டிஜிட்டல் கைது செய்வது எப்படி என்ற பயிற்சி அவருக்கு அளிக்கப்பட்டது. அவர் வந்து எங்களுக்கு பயிற்சி அளித்தார். அதன்படி, பெங்களூரு போலீஸ் போல நடித்து, வேலுாரைச் சேர்ந்த நபரிடம் 81.68 லட்சம் ரூபாய் மோசடி செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நரேஷ்கன்னா
மே 13, 2025 11:15

இதுமாதிரி நல்ல விசயங்கள் சகஜம். குஹராத், ம.பி, உபி ல ட்ரெய்னிங் எடுத்துட்டு வாங்க.


Prasanna Krishnan R
மே 13, 2025 10:37

Oxgatens is also another website. probably these gang must be involved. Already case is going in cyber crime. Don't leave these people alive.


Dharmavaan
மே 13, 2025 08:14

எதிலுமே பணம் மீட்கப்பட்டதா இல்லையா என்ற செய்தி இல்லை


Barakat Ali
மே 13, 2025 07:50

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஷோபனா ....... ஊரு பேரும் பெத்த பேரு .... ஆளு பேரும் பெத்த பேரு ....


நிக்கோல்தாம்சன்
மே 13, 2025 07:28

வேலை செய்யாமல் உடலை வளர்த்து ஊன் வளர்த்து அலையும் கழுதைகள் அதிகரித்து வருகின்றன


மனி
மே 13, 2025 04:57

கழுதயாட்ட இருக்குற வேல செய்யலாம் அல்ல இவள எல்லாம் விடக்கூடாது


Dharmavaan
மே 13, 2025 07:29

ஈஸி மனி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை