உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரோகிகள் அகன்றனர்: இபிஎஸ் நிம்மதி

துரோகிகள் அகன்றனர்: இபிஎஸ் நிம்மதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓமலுார்: ''கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர்; நிம்மதி ஏற்பட்டுள்ளது,'' என, கட்சியினரிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., சேலம் புறநகர் கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நிர்வாகிகளுடன் பேசும்போது கூறியதாவது: தமிழக சட்டபை தேர்தலுக்கு நாட்கள் அதிகம் இல்லை. குறைந்த நாட்களே இருப்பதால், கட்சியினர் தேர்தலை நோக்கி சுறுசுறுப்பாக வேண்டும். கட்சிக்குள் நெரிஞ்சி முள்ளாக சிலர் இருந்தனர். அவர்களை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். அவர்களாகவே தவறு செய்து விட்டு, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்துக் கொண்டு வெளியேறி விட்டனர். இனி அவர்கள் அனைவரும் நம்முடைய எதிரிகள் தான். இனி அவர்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். துரோகிகளோடு கைகோர்த்த பின், அவர்களை கட்சிக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் தான், கட்சியில் இருந்து நீக்கி விட்டேன். ஒருவிதத்தில் இப்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளது. மேலும், பலமான கூட்டணிக்கு வேகமாக பணிகள் நடக்கின்றன. கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

தமிழ்வேள்
நவ 01, 2025 18:23

அனைவருக்கும் துரோகிப்பட்டம் சுமத்தி, திமுகவின் உத்தரவுப்படி, அதிமுகவை பலி கொடுக்கும் ஆகப் பெரிய பச்சை துரோகி அய்யா எடப்பாடியார்... பொட்டி வந்து விட்டது போலும்...


mohana sundaram
நவ 01, 2025 15:27

உன்னைப் போன்ற ஒரு அயோக்கியன் இந்த நாட்டிற்கு சாபக்கேடு


Srprd
நவ 01, 2025 12:12

இவர் தான் அஇஅதிமுக விசுவாசிகளுக்கு மிகப் பெரிய துரோகி. திமுக அரசு செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போகிறார்.


V K
நவ 01, 2025 11:39

என்ன பழனி அடுத்தது யார் ஜெயக்குமார் ரா தான் இருக்கும் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு துரோகம் ஒரு சேட்டு பார்சல்


Muralidharan S
நவ 01, 2025 11:25

தமிழகத்தின் நலனுக்கு எதிராக 60 ஆண்டுகள் தொடர்ந்து மாறி மாறி ஊழல் ஆட்சி செய்த "துரோகிகள் அகன்றனர்" என்று மக்கள் சொல்லவேண்டும்.. அந்த நாளே தமிழகத்திற்கு நன்னாள்..


T.sthivinayagam
நவ 01, 2025 11:13

நண்பர்களுடன் சேர்ந்து தூரோகிகளை அகற்றி விட்டீர்கள். போட்ட புள்ளையார் சுழி கோணல் ஆனது, கைநழுவியது செங்கோட்டையா அல்லது கோட்டையா மேலிடத்துக்கு தான் சூஷ்மம் தெரியும்.


நிவேதா
நவ 01, 2025 10:59

அதோ பிள்ளையார் சுழி போட்டாச்சு. பெரிய கட்சி நம்ம கூட கூட்டணி வைக்கப்போகுதுன்னு பொதுக்கூட்டத்தில் நீங்கள் பேசிய போதே உங்கள் பலவீனம் தெரிந்தது. விஜய் எட்டி உதைத்தவுடன் மொத்த மானமும் போச்சு. அண்ணாமலை தலைமையில்லாத பாஜக உடனான கூட்டணி ஒரு தேவையற்ற சுமையே. கழட்டி விடுங்கள். அதிமுகவை ஒன்றிணைய வைக்கும் தகுதி உள்ள தலைவரிடம் உங்கள் பதவியை கொடுத்துவிட்டு வீட்டில் ஓய்வெடுங்கள். உண்மையில் நீங்கள் தான் அதிமுக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் துரோகி என்பதே உண்மை


Sundaran
நவ 01, 2025 09:50

உனக்கு ஆணவம் அதிகமாகி விட்டது 2026 தேர்தலில் தெரியும் அதன் தாக்கம். எம் ஜி ஆர் ஜெயலலிதா என்று உம்மை நினைத்து கொண்டுள்ளீர் . உமக்கு நாவடக்கம் இல்லை . செங்கோட்டையனுக்கு பின்னால் அரசியலுக்கு வந்தவர் நீர் என்பதை மறந்துவிடாதீர்


Ramesh Sargam
நவ 01, 2025 09:37

துரோகிகள் அகன்றனர். நல்லது. உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி போன்ற தலைவர்கள் வரவேண்டும் அதிமுகவில். வர வாய்ப்புண்டா?


Barakat Ali
நவ 01, 2025 08:49

போறவங்க எல்லாரையும் துரோகிகள்ன்னு சொல்லிட்டா எப்படி


V Venkatachalam, Chennai-87
நவ 01, 2025 11:01

அது தப்புதான். பச்சை துரோகிகள் ன்னு சொல்லி இருக்கணும். எடப்பாடி யார் தவறாக சொல்கிறார்.


புதிய வீடியோ