உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.* தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக, கால்நடைத்துறை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.* உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.* கூடுதல் தலைமை செயலாளர் கோபால், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்.* தமிழக மின்சாரத்துறை தலைவராக இருந்த ராஜேஷ் லகானி, வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம்.* வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சுந்தரவல்லி கல்லூரி கல்வித்துறை ஆணையராக நியமனம்.* பொதுத்துறை இணை செயலாளர் விஷ்ணு சந்திரன், வேலைவாய்ப்பு துறை இயக்குனராக நியமனம்.* சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கைத்தறி, ஜவுளித்துறை செயலாளராக நியமனம்.* போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் லில்லி, சமூக நலத்துறை ஆணையராக நியமனம்.* சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் லலிதா, ஜவுளித்துறை இயக்குனராக நியமனம்.* திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் பொதுத்துறை துணை செயலாளர் ஆக நியமனம்* தமிழக மின்சார வாரிய தலைவராக நந்தகுமார் நியமனம்* கைத்தறி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழக தலைவராக நியமனம்* தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவர் ஸ்வர்னா, ரூசா திட்ட மாநில இயக்குனராக நியமனம்* நிதித்துறை இணை செயலாளர் பிரதீவ் ராஜ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம்* கலால் துறை ஆணையராக முன்பு பதவி வகித்த, ஜெயகாந்தன் தமிழக நீர்நிலை மேம்பாட்டு திட்ட நிர்வாக இயக்குனராக நியமனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
அக் 02, 2024 19:52

இதுபோன்ற ஓரிரு செயல்களைத் தவிர திராவிடத்துக்கு வேறு எதுவுமே தெரியாது ............ பாவம் வாக்காளர்கள் .........


Ramesh Sargam
அக் 02, 2024 19:35

எந்த துறைக்கு மாற்றினால் என்ன, அவர்கள் திறமையாகவா பணியாற்றப் போகிறார்கள். அவர்கள் நேர்மையாக, திறமையாக பணியாற்ற விரும்பினாலும், அந்த துறையின் அமைச்சரின் கட்டளையின் பேரில்தான் அவர்கள் பணிபுரிய வேண்டும். தன்னிச்சையாக, நேர்மையாக பணிபுரிய வாய்ப்பே இல்லை.


Srprd
அக் 02, 2024 19:31

Side effects of the new power set up


என்றும் இந்தியன்
அக் 02, 2024 18:08

சரியான கமிஷன் திருட்டு திராவிட விடியல் அரசுக்கு வரவில்லையென்றால் அவர்களை பணியிட மாற்றம் செய்வதில் என்ன தவறு


அய்யாவு
அக் 02, 2024 16:03

உருப்படியா வேற வேலை கிடையாது.


Jysenn
அக் 02, 2024 15:19

இது எல்லாம் ஒரு நியூஸ்?


Mohammad ali
அக் 02, 2024 14:54

அம்ம சல்லிக்கு பிரயோஜனமில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை