மேலும் செய்திகள்
தொழில்நுட்ப ஆய்வு கூட்டம்
26-Apr-2025
மகளிர் குழுவின் பணிகள் கலெக்டர் திடீர் ஆய்வு
06-May-2025
படைகளை குறைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை.
13-May-2025
சென்னை: பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர்கள் 6 பேருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.இதன்படி, சென்னை மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் சுகன்யா, தனியார் பள்ளிகள் இயக்ககத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.சென்னை,(மேல்நிலைக் கல்வி)பள்ளிக் கல்வி இயக்ககம், இணை இயக்குநர், அ. ஞானகௌரி, (இடை நிலை)பள்ளி கல்வி இயக்ககம் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.சென்னை,(இடைநிலை) பள்ளிக் கல்வி இயக்ககம்,இணை இயக்குநரான ஆர்.பூபதி,(சிறப்புத் திட்டங்கள்)மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டார்.சென்னை (நிர்வாகம்), தொடக்கக் கல்வி இயக்ககம் இணை இயக்குநர்,ச. கோபிதாஸ், (மேல்நிலைக் கல்வி) பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநராக மாற்றம்.சென்னை (சிறப்புத் திட்டங்கள்)மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்ஆர். சுவாமிநாதன், (நிர்வாகம்) தொடக்கக் கல்வி இயக்கக இணை இயக்குநராக மாற்றம்.சென்னை-தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர், எம். இராமகிருஷ்ணன்,(நிர்வாகம்), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
26-Apr-2025
06-May-2025
13-May-2025