உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக்கில் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோர் இடமாற்றம்

டாஸ்மாக்கில் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோர் இடமாற்றம்

சென்னை : முதல் முறையாக மதுக்கடைகளில், 10 ஆண்டுக ளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிவோரை இடமாற்றம் செய்யும் பணியை, செப்டம்பருக்குள் முடிக்க, 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 4,787 கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்கிறது. இந்த கடைகளில், 23,629 பேர் பணிபுரிகின்றனர். தற்போது, அவர்கள் பணிபுரியும் மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. பலர், ஒரே கடையில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். இதனால், முறைகேடுகளில் ஈடுபடுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. எனவே, முதல் முறையாக பொது இடமாறுதல் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

விற்பனை குறைவான கடைகளில் அதிக நபர்களும், விற்பனை அதிகம் உள்ள கடைகளில் குறைவான ஊழியர்களும் பணி புரிகின்றனர். அனைத்து கடைகளுக்கும் சரியான எண்ணிக்கையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். ஒரு கடையில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், ஊழியர்களிடம் விருப்ப மனு பெற்று, 10 ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிவோரை இடமாற்றும் பணி செப்., மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி