உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து துறை வழக்கு

போக்குவரத்து துறை வழக்கு

தடை விதிக்க மறுப்புபோக்குவரத்து துறையில் பணி நியமன மோசடி தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தமிழ்வேல் என்பவரை, சிறப்பு நீதிமன்றம் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழ்வேல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ‘‘வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரை காப்பாற்றவும், வழக்கை இழுத்தடித்து நீர்த்து போக செய்யவும் தான், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,’’ எனக்கூறி, தமிழ்வேலை காவலில் வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தார். விசாரணையை நவ., 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சிறப்பு வக்கீல்கள் நியமனம்

போக்குவரத்து துறையில் பணி நியமன மோசடி தொடர்பான வழக்குகளில், அரசு தரப்பில் ஆஜராக மூன்று சிறப்பு பிளீடர்களை நியமித்து, தமிழக அரசின் சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு வழக்கறிஞர்களாக செந்தில்வேலன், சித்தார்த், ஆர்.சதீஸ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ