உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன், வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - டி.டி.எஸ்.எப்., உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்து உள்ளன.

அவற்றின் அறிக்கை:

போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கில், தொடர்ந்து காரணங்களை சொல்லி, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் சிரமத்தை கருத்தில் வைத்து, விரைவாக முடிவு காண வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரசு இனியும் தாமதிக்காமல் ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும். ஓய்வு பெற்றவுடன் பணப்பலன் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன், வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நாதன். திண்டுக்கல்.
ஏப் 15, 2025 10:50

இனி வரும் காலங்களில் ஆண்களுக்கும் (OC)இலவசம் தான் .


Ramesh
ஏப் 15, 2025 08:37

எல்லோரும் மறக்காம திமுகவிற்கு தானே ஓட்டு போட போறீங்க.


Jagannathan Narayanan
ஏப் 15, 2025 10:11

Well said


Amar Akbar Antony
ஏப் 15, 2025 07:27

போக்கத்த யூனியன் இந்த நான்கரை ஆண்டுகளாக மன்னரின் காலடியில் கிடந்து தன்னுடைய யூனியன் உறுப்பினர்களின் துயரத்தை துடைக்காமல் கலையாமல் குடும்ப ஆட்சியின் அவலங்களை கண்டு கொள்ளாமல் கிடைத்தது லாபம் என்கிற கோட்பாட்டில் மன்னரின் ...சேவகம் செய்துவிட்டு இனி தேர்தல் வருகின்ற நிலையில் கம்மிகள் தோழர்களின் கோரிக்கையை வலியுறுத்துவது கேவலம் மகா கேவலம்.


Amar Akbar Antony
ஏப் 15, 2025 07:07

ஏன் அரசு ஊழியர்கள் வாரிய ஊழியர்கள் அரசுப்போக்குவரத்தை தான் பயன்படுத்த வேண்டுமென்று சட்டம் இயற்றக்கூடாது? அப்போது இலாபகரமாக போக்குவரத்துத்துறை மாறுமே?


Durai Kuppusami
ஏப் 15, 2025 06:54

இதெல்லாம் ஒரு செய்தியா.. தலைவர்கள் எல்லா வேலையும் முடிச்சிட்டாங்க... பாவம் தொழிலாளர்கள்.....


Kasimani Baskaran
ஏப் 15, 2025 03:49

ஏற்க்கனவே நட்டத்தில் ஓடும் போக்குவரத்துத்துறை - இதில் இன்னும் கூடுதலாக சம்பளம்... விரைவில் திவாலாக வசதி செய்து கொடுத்தது போல ஆகிவிடும்.


முக்கிய வீடியோ