உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு தரப்பினருக்கு ஆதரவான உத்தரவு கோரி நிர்பந்தம்: வழக்கு விசாரணையில் இருந்து தீர்ப்பாய நீதிபதி விலகல்

ஒரு தரப்பினருக்கு ஆதரவான உத்தரவு கோரி நிர்பந்தம்: வழக்கு விசாரணையில் இருந்து தீர்ப்பாய நீதிபதி விலகல்

சென்னை: ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட வலியுறுத்தி அழுத்தம் தரப்படுவதால் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சரத்குமார் சர்மா விலகினார்.தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில், நிறுவனங்கள் தொடர்புடையஇரண்டு தரப்பினர் இடையிலான வழக்கை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.வழக்கில் ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு சாதகமான தீர்ப்பை வழங்குமாறு உயர் நீதித்துறையின் மதிக்கப்படும் உறுப்பினர் ஒருவர், நீதிபதி சரத்குமார் சர்மாவை அணுகியுள்ளார்.இதனால் வருத்தம் அடைந்த நீதிபதி சரத்குமார் சர்மா, குறிப்பிட்ட இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக வெளிப்படையாக அறிவித்தார்.இது தொடர்பான வழக்கு சென்னை தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதிபதி ஜதிந்திரநாத் ஸ்வைன் தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணையில், 'எங்கள் நீதிபதிகளில் ஒருவரிடம், ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவாக உத்தரவு கோரி அணுகப்பட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படுகிறோம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.ஒரு நீதிபதி விலகிய நிலையில், வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்பட உள்ளது.உயர் நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் தன்னை அணுகியதாக நீதிபதி வெளிப்படையாக கூறியிருப்பது, சட்டம் மற்றும் நீதித்துறையினர், கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதேபோல ஏற்கனவே கடந்த நவம்பர் 2024 இல், நீதிபதி சரத்குமார் சர்மா, வேறு ஒரு வழக்கில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Padmasridharan
ஆக 27, 2025 18:36

நிர்பந்தத்தால் விலகினார், நன்று. ஆனால் யார் நிர்பந்தித்தார்களென்று சொல்லவில்லையே சாமி.


இராம தாசன்
ஆக 27, 2025 02:31

சட்டத்திற்கு தேவை சாட்சிகள். அழுத்தம் கொடுத்த புண்ணியவான் சாட்சியுடனே மிரட்டி இருப்பான்.. அவன் பெயரை சொன்னால் அப்புறம் லாரி / பஸ் / கூலி படை தான் வரும்


தாமரை மலர்கிறது
ஆக 27, 2025 00:16

நீதித்துறையில் அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதற்காக ஓடுவது கோழைத்தனம். கார்பரேட்களின் மீது வீண் பழிபோடுவது கம்யூனிஸ்ட்கள் வழக்கம். அவர்களை போன்று நீதிபதி பேசக்கூடாது. கார்பரேட்கள் தான் இந்தியாவை தூக்கி நிறுத்தி உள்ளனர். இல்லையெனில் ஆப்பிரிக்கா தான்.


Sun
ஆக 26, 2025 20:57

தான் சொல்லும் நபருக்கு சாதகமான தீர்ப்பை நீதிபதி அளிக்கச் செய்வது வழி ஒன்று. இரண்டாவது வழி ஒத்து வராத நீதிபதிகளை வழக்கில் இருந்து விலகச் செய்வது. இரண்டாவது வழிதான் இவ் வழக்கில் நடந்துள்ளது. பின்னர் தனக்கு சாதகமான நீதிபதிகளை நியமிக்க முயல்வது. எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இந்திய நீதித் துறை !


திகழ்ஓவியன்
ஆக 26, 2025 19:31

மதுரை கிளைக்கு போனா ஈஸியா முடிந்து விடும்


V GOPALAN
ஆக 26, 2025 18:20

This judge is one in thousand in our Judiciary


panneer selvam
ஆக 26, 2025 18:11

Lobbying in judiciary is not new especially high profile cases . Example Jalyalaitha , she came out 12 of 13 excess wealth cases . Everyone knows how John D Cuha struggled to draft his judgement . How A Raja tried to speak to Madras HC judge for a bail case when he was the communication minister ? Who recommended Judge Karnan as High Court even though he did not practice well in lower or high courts . It all happens in India


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 26, 2025 18:00

வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை மீறி நியாயத்தின் பக்கம் தீர்ப்பு சொல்லி இருக்க வேண்டும் .இப்படி ஓடுவது கோழைத்தனம். அதே நேரம் மனிதர்களுக்கு உயிர் மீது ஆசை இருப்பது இயற்கைதானே .இவரும் வாக்கிங் போகவேண்டாமா.


Madras Madra
ஆக 26, 2025 17:54

சட்டத்துறை அழுகை ஆரம்பித்து பல மாமாங்கம் ஆகி விட்டது இப்பதான் வெளியே தெரிய ஆரம்பித்து உள்ளது.நீதிபதி விலகி இருக்கிறார் என்றால் உயிருக்கு பயந்து என்றுதான் நினைக்க முடியும்.


Mahendran Puru
ஆக 26, 2025 19:26

நீதிபதிகள் மட்டுமா து ஜ வே வாக்கிங் போக முடியலையாம். காலக் கொடுமை.


Sun
ஆக 26, 2025 17:54

நீதித் துறையில் நடக்கும் இது போன்ற தவறுகள்.இது போலத்தான் அவர்களுக்குள் மூடி மறைக்கப்படுகின்றன பொது வெளியில் பெரும்பாலும் வெளி வருவதே இல்லை.தப்பி தவறி இச்சம்பவம் வெளி வந்து விட்டது. இது உண்மை என்றால் யார் அழுத்தம் கொடுத்தாரோ அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்மந்தப் பட்டவரை சிறையில் அடைக்க வேண்டும்.


புதிய வீடியோ