உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருங்கால கமல் தான் த.வெ.க., ஜோசப் விஜய்

வருங்கால கமல் தான் த.வெ.க., ஜோசப் விஜய்

திருப்பரங்குன்றம் மலை வழக்கில் கிடைத்த வெற்றி, முருகனுக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்புக்காக நீதிபதியை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. இதில், மேல்முறையீடு சென்றாலும் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. விஜய், தன் சுயநலத்திற்காக கரூரில் ரசிகர்களை காக்க வைத்தது வெட்கக்கேடு. தன்னால் ஏராளமான ரசிகர்களின் உயிர் பறிபோய் விட்டதே என்ற குற்ற உணர்வு அவருக்கு இருக்க வேண்டும். இதில், 42 பேரின் உயிரை காக்கத் தவறிய தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கமலையும், மக்கள் நீதி மய்யம் கட்சியையும், தன் கட்டுப்பாட்டுக்குள், தி.மு.க., எப்படி கொண்டு வந்ததோ, அதேபோல் கரூர் சம்பவத்தை வைத்து விஜயையும், த.வெ.க.,வையும் தன் கட்டுப்பாட்டில் தி.மு.க., கொண்டு வந்து விடும். எனவே, வருங்கால கமல் தான், த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய். -அர்ஜுன் சம்பத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தத்வமசி
அக் 13, 2025 19:37

தமிழகத்தை காப்பாற்ற எவனாவது வருவானா ? என்று மைக் முன்பு பேச வேண்டியது, அப்புறம் படித்தவன் விவரமறிந்தவன் தேர்தலில் நின்றால் அவனுக்கு ஓட்டு போடுவது கிடையாது. காசு, குவாட்டர் வாங்கி ஒட்டு போடுபவர்கள் அதிகமாகி விட்டார்கள், இலவசத்துக்கு ஆசைப்பட்டு கரப்சன், கமிசனுக்கு ஒட்டு போட வேண்டியது. அப்புறம் தமிழகம் சரியில்லை என்று புலம்ப வேண்டியது. கூத்தாடி பின்னால் ஓட வேண்டியது. படித்தவன், தகுதி வாய்ந்தவன் வந்தால் அவனுக்கு ஓட்டு போடுவதில்லை. இதில் தமிழகம் எப்படி விளங்கும் ?


Ajrjunan
அக் 13, 2025 15:12

சோம்பத்.. உங்களுக்கு கூலி கொடுப்பவன்தான் விஜயை களமிறக்கிருக்கிறான் என்பது கூட தெரியாம ஏதாவது உளறிகிட்டு... பொய் தூரமா விளையாடுப்பா.


தலைவன்
அக் 13, 2025 12:05

வருங்கால நித்தி ஸ்வாமிதான்??


angbu ganesh
அக் 13, 2025 09:33

வருங்கலமென்ன நிகழ்காலமே அப்படித்தானே


Mario
அக் 13, 2025 09:33

கேரளாவில் ஐ.டி. ஊழியரான ஆனந்து அஜித் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதாக அவர் வெளியிட்ட கடைசி பதிவு, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Indian
அக் 13, 2025 09:09

யார் இவர் ??


புதிய வீடியோ