உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., மாநாடு தேதி மாற்றம்

த.வெ.க., மாநாடு தேதி மாற்றம்

மதுரை: விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், த.வெ.க., மாநாட்டை முன்கூட்டியே நடத்துமாறு போலீசார் தெரிவித்தனர். எனவே, ஆக., 18 முதல் 21க்குள் மாநாடு நடத்த பாதுகாப்பு கோரி கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், மதுரை எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து நேற்று மனு கொடுத்தார். வரும் 25ல் மதுரை பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடத்த தேதி குறிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் துவங்கி இருந்த நிலையில், 'வரும் 27 விநாயகர் சதுர்த்தி நாள். பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் செல்வதால், முன்கூட்டியே மாநாடு நடத்திக் கொள்ளுங்கள்' என, த.வெ.க., தரப்பிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, போலீஸ் அனுமதி கேட்டு, மதுரை மாவட்ட எஸ்.பி.,யிடம், நேற்று த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் மீண்டும் மனு கொடுத்தார். அவர் கூறுகையில், ''வேறு எந்த தேதியில் மாநாடு நடத்தப்படும் என்பதை விஜய் அறிவிப்பார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி