உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உக்ரைனுக்கு ராணுவ உதவி நிறுத்தம்: அறிவித்தார் டிரம்ப்

உக்ரைனுக்கு ராணுவ உதவி நிறுத்தம்: அறிவித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா இதை நீண்ட காலத்திற்கு பொறுத்துக்கொள்ளாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே வெள்ளை மாளிகையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. உக்ரைன் அதிபர் வெளியேற்றப்பட்டார். பின்னர், கனிம ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாமலும், கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படாமலும் முடிவடைந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ifmq5ydh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மிக தொலைவில் உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து சமூகவலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இது ஜெலென்ஸ்கியால் கூறப்பட்டிருக்கக்கூடிய மிக மோசமான அறிக்கை, அமெரிக்கா இதை நீண்ட காலத்திற்கு பொறுத்துக்கொள்ளாது. ஐரோப்பா உக்ரைனைப் பாதுகாக்கச் செலவிட்ட பணத்தை விட, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதற்கு அதிக பணத்தைச் செலவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பகிரங்கமாக மோதியதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் மாறி, மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராணுவ உதவிகள் நிறுத்தம்

இதற்கிடையே நிருபர்கள் சந்திப்பில், 'உக்ரைனுடன் கனிம வள ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்பது சந்தேகம் தான். வெறும் போருக்காக உக்ரைனுக்கு 350 பில்லியன் டாலர் கொடுத்த பைடனின் செயல் முட்டாள் தனமானது' என டிரம்ப் கூறியிருந்தார்.இதையடுத்து, 'உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது. 'பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் அமெரிக்க இந்த முடிவு எடுத்துள்ளது' என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

kalyan
மார் 04, 2025 15:25

கிரிமியா நாட்டிற்கு செய்யப்பட மின்ஸ்க் ஒப்பந்தத்தை உக்ரைனும் ரஷ்யாவும் சேர்ந்து மகிறோன் மற்றும் அநேக ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் ஸிலான்ஸ்கிக்கு முன்னால் இருந்த உக்ரைன் பிரதமர் செய்தது சேலன்ஸ்கி மதிக்காமல் அமெரிக்கா ஆதரவை நம்பி காற்றில் பறக்க விட்டது தான் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணம் . அமெரிக்கா இப்போது ஆதரவு தர மறுக்கிறது . கிரிமியா மட்டுமல்லாமல் பல மாநிலஙகளும் ரஷ்ய ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது . சேலன்ஸ்கி பதவியை ராஜினாமா செய்து தேர்தல் நடத்தினால் தப்பிக்கலாம். "விநாச காலே விபரீத புத்தி " போதாத காலம் வந்தால் மழுங்கும் மூளை என்பது உண்மைதான்


M Ramachandran
மார் 04, 2025 12:44

இரு நாடுகளுக்குள் போர் என்றால் எப்படியான மறைமுக உலக பொருளாதாரத்திற்கு கேடு தான். அதுவும் ஏலமாய் நாடுகளுக்கு நிச்சயம் பாதிப்பு யேற்படும். இதைய்ய உணர்ந்த பெரியண்ணன் போர் நிறுத்தம் பற்றி கூறுவது யேர்புடையதெ. கேலேன்ஸ்கி இதைய பற்றி உணராமல் தன் நாட்டுக்கு மக்கள் அல்லலுறுவது தெரிந்தும் இறுமாப்புடன் நடப்பது கேள்விக்குரியதே. மக்கள் பல இன்னலுக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஐரோபியா நாடுகளும் விலகி இருப்பது நன்றே. டிரம்ப் கூறுவதும் ரஸ்ய கேஸும் எண்ணையையும் அதிக விளைய கொடுத்து வாஙக வேலாண்டிய நிர்பந்தத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து


sankaranarayanan
மார் 04, 2025 12:35

இதேபோன்று பாகிஸ்தானுக்கும் அமெரிக்க செய்யும் போர் ஒப்பந்தத்திற்காக செலவிடும் ராணுவ உதவி கணக்கிலடங்காது அதை முற்றிலும் ஜனாதிபதி டிரம்ப் முற்றிலும் நிறுத்த வேண்டும் மக்களது வளர்ச்சிக்கு மட்டும் அமெரிக்க உதவினால் பொதும் பிறகு பாகிஸ்தான் எல்லையில் விஷமம் செய்யது திரிந்துவிடும் வழிக்குவரும்


Sivagiri
மார் 04, 2025 12:22

கோபத்தோடு எழுபவன் - நஷ்டத்தோடு அமருவான் - டிரம்புக்கு இப்போ 350 பில்லியன் போச்சா ? . . . ஆனா செலென்சிகிக்கு நாடே போச்சு ,


Srinivasan Krishnamoorthy
மார் 04, 2025 16:08

Trump is a business man. He will recover with mineral deals. Many US companies to invest to process rare minerals in Ukraine and Russia...


sathu
மார் 04, 2025 12:06

இந்த போரே தேவையில்லாத ஆணி தான். BlackRock George Soros இன் ஒரு US கம்பெனி, உக்ரைன்-இல் உள்ள தனது நிலத்தை பாதுகாக்க உக்ரைனை NATO-விற்குள் இழுக்க முயற்சித்ததே, இந்த போர் துவங்க காரணமாயிற்று. Trump சரியான பாதையை தேர்வு செய்துள்ளார். வெற்றி நிச்சயம்.


Srinivasan Krishnamoorthy
மார் 04, 2025 16:13

Correct. It is all foolhardiness of the US deep state, Obama/Biden group, now UK. all will fail


Saai Sundharamurthy AVK
மார் 04, 2025 11:45

தன் நாட்டை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகள் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள் என்று கூட ஜெலன்ஸ்கி புரியாமல் இருக்கிறார். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எல்லோருமே இரட்டை வேடம் போட்டு ஜெலன்ஸ்கியை மூளை சலவை செய்கிறார்கள். இப்போதைக்கு தற்காலிகமாக அமெரிக்கா விலகி நிற்கிறது அவ்வளவு தான். ஐரோப்பிய நாடுகள் மட்டும் உக்ரைன் நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது. ஒன்று ஒற்றுமையாக இருந்து கூட்டாக கொள்ளையடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் அடிதடி தான் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள் !!!


Venkatesan Srinivasan
மார் 04, 2025 11:38

உக்ரைன் இத்தனை வருடங்கள் ரஷ்யாவுடன் சண்டையிட்டு பெற்ற இழப்பு ரஷ்யாவை விட அதிகம். அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது சர்வதேச இராஜ்ய உறவுகளுக்கு மாறானது. இந்த விஷயத்தில் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் மிகவும் கவனமாக செயல்படுகிறது. எந்தவொரு நாட்டின் உள்நாட்டு தேர்தல் விவகாரத்தில் தலையிடாது. விளக்காக நமக்கு தொடர்ந்து இடையூறு செய்யும் பாக்கிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிலைமையை அணுகும். ஜெலன்ஸ்கி தொடர்ந்து சண்டையை நடத்த விரும்புவது அதிலும் அமெரிக்காவின் உதவி பெற்று அவர்களுக்கே நிபந்தனைகள் விதிக்க விரும்புவது தற்போதைய ட்ரம்ப் அரசால் ஏற்க முடியாது. ட்ரம்ப் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை மேலும் வீணடிக்க விரும்பவில்லை. இந்த நிதர்சனமான உண்மைகளை ஜெலன்ஸ்கி உணர்ந்திருந்தார் அமெரிக்காவின் வழிகாட்டுதல் மற்றும் துணையுடன் பாதுகாப்பான முறையில் போர் நிறுத்தம் செய்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வழி தேட வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ்


google
மார் 04, 2025 11:14

super Trump


ஆரூர் ரங்
மார் 04, 2025 10:27

இந்நடவடிக்கை உக்ரேன் நாட்டையே ரஷியாவிடம் ஒப்படைப்பதற்கு சமம். கார்ப்பரேட் அதிபர் டிரம்ப்புக்கு என்ன கிடைக்கிறது? ஆக ஒரு நாட்டையே இரு வல்லரசுகளும் கூறு போட்டு சாப்பிடும் கொடுமை. இனிமேல் சிறிய நாடுகள் சமாளித்து நிலைப்பது நடவாது . பழைய காலனி ஆட்சி முறை மீண்டும் ஏற்படும்.


Sivagiri
மார் 04, 2025 09:59

அங்கே வெள்ளை மாளிகையிலேயே, 350 பில்லியன் டாலரையும், எடுத்து வச்சிட்டு போடா - வெண்ணை - என்று சொல்லி அரெஸ்ட் பண்ணிருக்க வேண்டாமோ? இனிமே பணம் எப்படி வசூல் பண்றது? பாகிஸ்தானுக்கும் இப்டி ஒரு கிட்டியை போடலாம்ல . . ?


Srinivasan Krishnamoorthy
மார் 04, 2025 10:22

us will take ukraine s rare minerals, also will sign deal with Russia on rare minerals, this will keep away china being a monopoly bon certain metals, will give us companies a chance to dominate the manufacturing and control of vital minerals


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை