உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பான தேர்தல் நடைமுறை; இந்தியாவை டிரம்ப் பாராட்டியது மகிழ்ச்சிக்குரிய விஷயம்: சசி தரூர்

சிறப்பான தேர்தல் நடைமுறை; இந்தியாவை டிரம்ப் பாராட்டியது மகிழ்ச்சிக்குரிய விஷயம்: சசி தரூர்

புதுடில்லி: இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை உதாரணமாக எடுத்து கொண்டது, நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒன்று என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்தார்.அமெரிக்க தேர்தல் முறையை சீரமைப்பதற்கான நிர்வாக உத்தரவில், அதிபர் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டி இருந்தார். இது குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறியதாவது: அமெரிக்காவில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்கள் ஓட்டளிக்க வரும் போது குடியுரிமை பெற்றவர் என்பதற்கு சுய சான்று அளித்தால் போதும்.ஆனால் இந்தியாவில், நம்மிடம் வாக்காளர் பட்டியல் உள்ளது. அடையாள அட்டை இருக்கிறது. ஓட்டளிக்கும் நபர் உண்மையில் நமது குடிமகன் தான் என்பதை நிரூபனம் செய்வதற்கு தேவையான நடைமுறைகள் அனைத்தும் உள்ளன. இந்த நடைமுறை 1952ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. சிறப்பாகவும் செயல்படுகிறது.இதற்கு உலகம் முழுவதும் நிறைய மரியாதை உள்ளது. இதனை அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்களிடம் உதாரணம் காட்டி இருக்கிறார். அவரது நாடு சரியாக இல்லை என்றும் அவர் கூறுகிறார். இது நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

spr
மார் 27, 2025 19:23

இது மட்டுமல்ல இந்தியாவின் பல முயற்சிகள் வெளிநாட்டவரால் பாராட்டப்படுகின்றன. ஆதார் அட்டை மூலம் வாங்கிப் பரிவர்த்தனை, ரூ பே அட்டை மூலம் மின்னணு வகை பணப் பரிவர்த்தனை என பல. இன்னமும் நமக்கென்று அரபு நாடுகளை போல அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கூகுளை போல ஒரு பிரவுசர், மின்னஞ்சல் தேவை. இந்தியாவின் ஒரு முகப்பட்ட கல்விமுறை சிறப்பென முந்தைய அதிபர் திரு ஒபாமா கூறியிருப்பதாக ஒரு செய்தி. ஆனால், புற்றீசல் போல பொறியியற்கல்வி கூடங்கள் உருவாகி தரமில்லா கல்வி அளிக்கப்படுவதும், பயன்பாட்டு அறிவுக்கு குறைவு என்பதுவும் அவர்கள் சுட்டிக்காட்டும் ஒரு கருத்து. கல்விக் கொள்கையில் அரசியலைப் புகுத்தாமல் மத்திய மாநில அரசுகள் கல்வியை மேம்படுத்த முயற்சி செய்தால் வரும் காலம் வளமான காலமே


Oviya vijay
மார் 27, 2025 18:47

ஒரு ஊ ஃபீஸ் கூட திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு ஃபார்முலா பத்தி பேச மாட்டுறாங்க...


Petchi Muthu
மார் 27, 2025 16:00

எப்படி இருக்கீங்க ஊழல் பேர்வழிகள் தேர்தல் நடைமுறையில் ஊழல் செய்ய முயற்சிக்கின்றன.. ட்ரம்ப் பாராட்டியது மகிழ்ச்சி


சண்முகம்
மார் 27, 2025 15:58

எல்லாம் சரி. அமெரிக்காவில் கள்ள வாக்குகள், ஒரு கோடிக்கு பத்து. இந்தியாவில் எவ்வளவு?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 27, 2025 15:56

இவ்வளவு இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் கள்ள வோட்டு மாலையில் வாக்கு பதிவு நேரம் முடிந்ததும் கதவை சாத்தி விட்டு பூத் ஏஜெண்ட்கள் பல்க் வோட்டு போடுவது தடுக்க முடியவில்லையே.


சமீபத்திய செய்தி