உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க கல்வி துறையை மூட டிரம்ப் முடிவு; மாகாணங்களுக்கு பொறுப்பை வழங்க திட்டம்

அமெரிக்க கல்வி துறையை மூட டிரம்ப் முடிவு; மாகாணங்களுக்கு பொறுப்பை வழங்க திட்டம்

வாஷிங்டன் : அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில், அமெரிக்க கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவை, அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபராக, கடந்த ஜன., 20ல் பதவியேற்றார் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப். இரண்டு மாதங்களாக, தினமும் ஏதாவது ஒரு புது புது உத்தரவுகள், அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதால், கல்வித் துறையை மூடப் போவதாக அவர் கூறியிருந்தார். பழமைவாதிகளான குடியரசு கட்சியின் கொள்கையும் இதுவாகும்.அமெரிக்காவில், 1979ல் பார்லிமென்ட் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது கல்வித் துறை. கல்விக் கொள்கையை உருவாக்குவதுடன், நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மானியம் வழங்குவது உள்ளிட்ட வற்றை இந்தத் துறை கவனித்து வருகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி, தன் தாராளமயமாக்கல் கொள்கையை, கல்வித் துறை வாயிலாக நாடு முழுதும் திணிப்பதாக, குடியரசு கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக மதவாத, பயங்கரவாத, கம்யூனிச கொள்கைகள் புகுத்தப்படுவதாக, டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.இந்நிலையில், அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கல்வித் துறையை முழுதுமாக மூடுவதற்கு உத்தரவிட டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில், மாகாணங்களுக்கே கல்வியை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்படும் என, அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.அரசின் செலவுகள் குறைப்பது என்பதைவிட, இதில் அரசியல் காரணமே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு பல மாகாணங்கள், பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், மத்தியில் ஆட்சியில் ஜனநாயகக் கட்சி இருந்தாால், அதன் கொள்கைகளையே குடியரசு கட்சி ஆதரவு உள்ள மாகாணங்களிலும் பின்பற்ற வேண்டும். இதனாலேயே, பழமைவாத கொள்கை உடைய குடியரசு கட்சி, கல்வியை மாகாணங்களின் கட்டுப்பாட்டுக்குள் விடுவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதன்படியே, கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவை டிரம்ப் பிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பார்லிமென்டில் ஒப்புதல் பெறாமல் இதை செயல்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பல்லவி
மார் 22, 2025 16:49

நம்ப தலைவர் அமெரிக்கா சென்று பெற்றுக்கொண்ட பாலிசி என்று தோணுறது , எவ்வளவு சொல்லியும் கேட்காத தமிழரின பிரச்சினைக்கு அமெரிக்கன் டெக்னாலஜி ஐடியா கொடுத்து அனுப்பி இருக்கு போல


Haja Kuthubdeen
மார் 21, 2025 16:20

அமெரிக்க அரசு தன்நாட்டிற்கான கொள்கைசட்ட திட்டங்களை உண்டாக்குது..இங்குள்ளவர்களுக்கு அமெரிக்காவில் இருப்பதாக நினைப்பு...


Rasheel
மார் 21, 2025 11:17

இந்தியாவில் இதை கொண்டு வந்தால் வியாதிகள் நம் நாட்டை பாக்கிஸ்தான் பங்களாதேஷுக்கு, நாட்டை விற்று விடுவார்கள்


M Ramachandran
மார் 21, 2025 11:12

நல்ல முடிவு.


Rajarajan
மார் 21, 2025 09:20

மாநிலத்திற்கு தருவதில் தவறில்லை. சரி தான். ஆனால், அனைவர்க்கும் ஒரேமாதிரி கல்வி, பாடத்திட்டம், மொழிக்கொள்கை என அனைத்துமே ஒன்றாக இருக்கவேண்டும் என்பது தானே விஷயமே. பாகுபாடு கூடாது என்பது தானே தேவையே. அப்படி இல்லாமல், பொத்தாம் பொதுவாக சரி என்றால், குதிரைக்கு குர்ரம் , யானைக்கு யர்ரம் என்ற கதை தான்.


பாமரன்
மார் 21, 2025 08:53

இந்த நியூஸ் பொறுத்தவரை அது அமிரிக்கா... இந்தியா வேறு...


sankaranarayanan
மார் 21, 2025 08:31

கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில், மாகாணங்களுக்கே கல்வியை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்படும் என, டிரம்பு கூறியுள்ளார். அரசின் செலவுகள் குறைப்பது என்ற சில காரணங்களால் இதை அமல்படுத்த ஆயத்தமாக உள்ளார் அதையே நமது திராவிட மாடல் அரசு பாரதத்திலும் பின்பற்ற முயற்சிக்கும் இதனால் கல்வித்துறை மாகாணங்களின் கைகளுக்குள் வந்துவிடும் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நப்பாசைதான் ஆனால் இங்கே அது நடக்கவே நடக்காது


PARTHASARATHI J S
மார் 21, 2025 08:14

கருத்து சொல்பவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றபடி சொல்கிறார்கள். புலியை (அமெரிக்கா) பார்த்து பூனை (தமிழ்நாடு, இந்தியா) சூடு போட்டுக் கொண்டதாம். கதை அப்படி.


Sampath Kumar
மார் 21, 2025 08:01

அட்ரா சக்கை அப்படி போடு கல்வி மாநில பட்டியலில் இருந்து நீக்கினால் என்ன ஆகும் என்பதை புரிந்து கொண்டு விட்டார் இங்கே நம்ம பிஜேபிகள் குலக்கல்வி கத்திரிக்காய் கல்வி என்று சொல்லி நாட்டை பழமையை நோக்கி கொண்டு செல்ல துடிகிறார்கள் ஆக தீ மு க மாடல் அமெரிக்காவரை சென்று வென்று உள்ளது இப்பாவது நடுவண் அரசு புரிந்து கொண்டால் சரி


Kumar Kumzi
மார் 21, 2025 09:26

இலவசங்களுக்கு ஓவாவுக்கும் ஓட்டு போடுற கொத்தடிமை ஒனக்கு தனியார் பள்ளிகளில் படிக்க வக்கிருக்கானு சொல்லு


ஜெய்ஹிந்த்புரம்
மார் 21, 2025 07:39

இவரை ஒருத்தர் தன்னோட டியர் பிரெண்டுன்னு சொன்னாரு. ஆனா இவரு செய்யிறதை பாத்தா ஒரே நாடு ஒரே கல்வி இல்லைன்னு தோணுது. மாகாணங்களுக்கு அந்த உரிமையை கொடுக்கிறார். ஒரிஜினல் யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்பது அது தான்.


Kumar Kumzi
மார் 21, 2025 09:29

அதை பற்றி பேச ஏன் கவலை


புதிய வீடியோ