உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்

பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக - பாஜ தலைமையில் மாபெரும் கூட்டணியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியிருக்கையில், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழு என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ygu4xhkk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் விலகியிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, காட்டுமன்னார் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், '2026 தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிப்பேன். அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும்,' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

INDIAN Kumar
செப் 04, 2025 13:50

ஊழல்வாதிகளை ஓரம் கட்டுவோம் , இலவசங்களை ஒழிப்போம் வேலை வாய்ப்பை பெருக்குவோம் தமிழ்நாட்டில் சோம்பேறிகள் பெருகிவிட்டார்கள் வெளி மாநிலத்துக்காரன் உழைக்கிறான் சம்பாதிக்கிறான் தமிழ்நாட்டுக்காரன் மனைவியை அடித்து உதைத்து காசு வாங்கி கொண்டு குடித்து மல்லாந்து கிடக்கிறான், தமிழகமே விழித்து கொள்


INDIAN Kumar
செப் 04, 2025 13:44

திமுக, ஆதிமுவுக்கு சற்று ஓய்வு கொடுங்கப்பா விஜய் சீமான் இருவரில் ஒருவர் வரட்டும் உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு கொடுப்போம் சம்பாத்தியம் கொஞ்சம் குறையட்டும்


Gnana Subramani
செப் 04, 2025 12:51

தினகரன், பிஜேபியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால், டெபாசிட் கூட கிடைக்காது என்பதை உணர்ந்ததால் தான் ரெய்டு வந்தாலும் பரவாயில்லை என்று கூட்டணியை விட்டு வெளியே வருகிறார்


RAAJ68
செப் 04, 2025 09:23

நீங்கள் செங்கோட்டையன் பன்னீர்செல்வம் அண்ணாமலை ஆகிய நான்கு பேரும் திமுகவின் அடிவருடிகள் ஆகிவிட்டனர். நான்கு பேரும் சேர்ந்து கொண்டு பாஜக அண்ணா திமுகவுக்கு... போக திட்டம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 08:09

20 ரூபாய் டோக்கனுக்கு சொந்தக்காரர். ஓபிஎஸ் அமமுக செங்கோட்டையன் பிரேமலதா காங்கிரஸ் தவெக ஆகியோர் சசிகலா தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டம். திட்டத்தின் தயாரிப்பாளர் திமுக.


Oviya Vijay
செப் 04, 2025 08:08

எப்படியோ தீம்கா தோல்வி உறுதி...


Kasimani Baskaran
செப் 04, 2025 04:00

ஆத்தா தீம்க்கா உடைந்தது உடைந்ததுதான். திராவிட ஒழிப்பு தொகுப்பு ஒன்று நிறைவடைந்தது. இனி தொகுப்பு இரண்டு ஆரம்பிக்க வேண்டும். அதில் தாத்தா தீம்க்காவும் பணால். அதன் பின்னர் தமிழனை முன்னேற்ற தடையில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 04, 2025 02:17

என்டிஏ மோடி பிராண்ட் வாஷிங் மெசினை விட்டு வெளியே வந்தா ரெயிடு விடுவானுங்களே. என்ன செய்றதா உத்தேசம்?


raja
செப் 04, 2025 07:24

எப்படி தொட்டு பார் சீண்டி பாருன்னு ஏன் சொல்றான்னு கேளு.


Akash
செப் 04, 2025 00:32

BJP will be alarmed at this development


Tamilan
செப் 03, 2025 23:51

சா மோடிக்கு ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்.


புதிய வீடியோ