உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலில் துார்வாரப்பட்ட மண்ணால் 28 ஏக்கரில் உருவானது நிலப்பரப்பு: துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

கடலில் துார்வாரப்பட்ட மண்ணால் 28 ஏக்கரில் உருவானது நிலப்பரப்பு: துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் துார் வாரப்பட்ட மண்ணை பயன்படுத்தி, 28 ஏக்கரில் புதிய நிலப்பரப்பாக மாற்றி, துறைமுக நிர்வாகம் சாதனைபடைத்துள்ளது.துாத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மூன்றாவது வடக்கு சரக்கு தளத்தில், 14.20 மீட்டர் மிதவை ஆழம்கொண்ட பெரிய சரக்கு கப்பல்களை கையாள வசதியாக ஆழப்படுத்தும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையை, 488 மீட்டரில் இருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தி, விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்கு பெட்டக கப்பல்களை கையாளும் வசதியை துறைமுகம் பெற்றுள்ளது.கடலில் ஆழப்படுத்தும் பணியால், துார் வாரப்பட்ட மண் வளங்களை வீணடிக்காமல், துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கு அருகில் மற்றும் காற்றாலை இறகுகளை சேமித்து வைக்கும் கிடங்கு பகுதியில், 8 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட துார் வாரப்பட்ட மண் வளங்களை பயன்படுத்தி, 28 ஏக்கர்புதிய நிலப்பரப்புஉருவாக்கப்பட்டுள்ளது.துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியதாவது:பொதுவாக ஆழப்படுத்தும் பணியில் துார்வாரப்பட்ட மண் வளங்கள் கழிவு பொருட்களாகவே கருதப்பட்டு வருகின்றன.'கழிவில் இருந்து செல்வம்' என்ற புதிய அணுகுமுறையை பயன்படுத்தி, துார் வாரப்பட்ட மண்ணை கொண்டு நிலப்பரப்புகளை உருவாக்கியுள்ளோம்.கழிவாக கருதப்படும் துார் வாரப்பட்ட மண் வளத்தை மறுசுழற்சி செய்து பயனுள்ளதாய் மாற்றியதில், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.ஆழப்படுத்தும் பணியில் துார் வாரப்பட்ட மண் வளங்களை திட்டமிட்டு பயன்படுத்தியதால், சரக்கு தளங்களையும், சேமிப்பு கிடங்குகளையும் அமைப்பதற்கான பயனுள்ள நிலத்தை உருவாக்க முடிந்தது.ஆழப்படுத்தும் போது கிடைத்த மண்ணை பயன்படுத்துவதால், சராசரியாக, 1 கன மீட்டர் நிலத்தை உருவாக்குவதற்கு, 600 ரூபாய் வரைசேமிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
மே 25, 2025 09:13

பிரிட்டிஷ் காலத்தில் செயற்கையான சென்னைத் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்புதான் மணல் படிந்து மெரீனா கடற்கரை உருவானது. ஆனால் பின்விளைவாக சென்னைக்கு வடக்கே கடலரிப்பு ஏற்பட்டு பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி பிற்காலத்தில் அனுபவிக்கணுமா?


Kasimani Baskaran
மே 25, 2025 07:33

இது ஒன்றும் சாதனை அல்ல. துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்று இதுவரை ஒருவருக்கும் மனது வரவில்லை - ஆனால் பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு வரவேண்டிய துறைமுகம் கேரளா சென்று விட்டது. அந்த அளவுக்கு தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது புரிந்து கொள்ள முடிகிறது. தூத்துக்குடியை மேம்படுத்துவது வரவேற்கத்தக்கது .


N Annamalai
மே 25, 2025 07:29

அப்படியெல்லாம் செழிப்பான வனப்பகுதி உருவாக்கவும் .மங்கிராவே காடு ஏற்படுத்தலாம் .தயவு செய்து வீட்டுமனை ஆக்கி விடாதீர்கள் .


Raj
மே 25, 2025 06:49

அங்கு அடர்த்தியான மரங்கள் நட்டால், மண் அரிப்பைத் தடுக்கலாம்.


மீனவ நண்பன்
மே 25, 2025 03:36

திராவிட அடிப்பொடிகளுக்கு அனுமதி கொடுத்தால் மெரினா கடலையே ரியல் எஸ்டேட் ஆக மாற்றிக்காட்டுவார்கள்


சமீபத்திய செய்தி