உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் மீனவனை இலங்கை கடற்படை தொட்டால்... மக்களிடம் தினுசாய் சான்ஸ் கேட்ட சீமான்

என் மீனவனை இலங்கை கடற்படை தொட்டால்... மக்களிடம் தினுசாய் சான்ஸ் கேட்ட சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: ''நாட்டை ஆளும் வாய்ப்பை ஒரே முறை என்னிடம் கொடுங்கள், அதன் பின்னர் தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினால் என்னிடம் கேளுங்கள்,'' என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் அவரிடம் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது; என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? மனது முழுக்க கோபமும், வெறுப்பும், வலியும் இருக்கிறது. என்ன செய்யலாம் என்று சொல்கிறீர்கள்? ஒரு தடவை என் மீனவனை அடித்தால் அடிப்பேன் என்று கூறியதற்கு நான் 6 மாதம் சிறையில் இருந்தேன்.ஒரே வழிதான்... ஒருமுறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். இந்த நாட்டை ஆளுகிற வாய்ப்பை ஒரே ஒரு முறை எனக்கு தாருங்கள். என் மீனவனை இலங்கை கடற்படை தொட்டால் பிறகு பாருங்கள். எல்லை தாண்டி வருவதுதான் பிரச்னை. கேரள மீனவர்கள் எல்லை தாண்டி வருகிறார்களா, இல்லையா? ஏன் அவர்கள் மட்டும் சிறைபிடிக்கப்படுவது இல்லை, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது இல்லை, சுட்டுக்கொல்லப்படுவது இல்லை. இதற்கு யாராவது பதில் சொல்லுங்கள். அவர்களை கேட்க ஆள் இருக்கிறது, எனக்கு ஆள் இல்லை.நான் வந்து உட்கார்ந்தால் (ஆட்சியில்) என் மீனவனை தொட்டு பார்த்துவிடு. உன்னால் அது முடியாது. காசு கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற நிலைமை இருக்கும் வரை, அதை உருவாக்கி வைத்திருக்கும் இந்த கட்சிகளின் தலைவர்கள் இருக்கும் வரை நல்லாட்சி மலராது.நாடும், மக்களும் நிம்மதியாக வாழ முடியாது. அதுவரை இந்த பிரச்னை இருக்கத்தான் செய்யும், வேறு வழியே கிடையாது.இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sck
நவ 15, 2024 22:34

சீமான் கையில் நாட்டை ஆள ஒரே முறை கொடுத்தால் அது குரங்கு கையில் பூமாலை கதைதான். நாட்டின் ராணுவம், கடற்படை மத்திய அரசிடம் இருக்கா, இல்லை மாநில அரசிடம் இருக்கா என்பது கூட தெரியாத கூத்தாடி இடம் ஆட்சியை கொடுத்தா என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


தத்வமசி
நவ 15, 2024 21:09

அடுத்த ஜெலன்ஸ்கியாக மாறி விடுவார்.


தமிழ்வேள்
நவ 15, 2024 20:26

நா.த.க- நாறிப்போன தறுதலை கட்சி...இவரது தாறுமாறான பேச்சுக்கு, கட்சிக்கு ஏற்ற பெயர் இது மட்டுமே..


Venkatesan Srinivasan
நவ 15, 2024 20:23

இந்த பிரச்சினை ஓய்வதாக தெரியவில்லை. அடுத்த நாட்டின் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் நுழைவது ஏதோ தங்கள் தனிப்பட்ட உரிமை என கோருவது ஏற்க இயலாது. எந்த நாட்டிற்கும் தங்கள் நாட்டு எல்லையை பாதுகாக்க எல்லா உரிமைகளும் உள்ளது என சர்வதேச நெறிமுறைகள் உள்ளன. மேலும் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் போது எல்லை தாண்டியவர்கள் சுடப்பட்டனர். இப்போது சிறை மட்டுமே பிடிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலை என்றும் நீடிக்கும் என எதிர்பார்ப்பது தவறு.


Natarajan Ramanathan
நவ 15, 2024 19:58

எல்லை தாண்டி போனால் சுடாமல் போனால் போகிறது என்று கைது மட்டும் செய்கிறார்கள். இதுவே மோடி அரசுக்கு கிடைக்கும் மரியாதைதான்.


rama adhavan
நவ 15, 2024 19:09

பக்கத்து வீட்டுக்கு உள்ளேயே நீ போக முடியாது. பக்கத்து நாட்டுக் கடலில் போய் மீன் திருடினால் அவன் விடுவானா? ஆழ் கடலில் போய் பிடிக்க சொல். கேரள மீனவர்கள் இலங்கை கடலுக்கு செல்கிறார்களா என்பதை அந்த அரசிடம் ஆர் டி ஐ போட்டு கேட்டு பதில் பெற்ற பின் பேசு. வெட்டி பேச்சு வீண் வேலை. படித்தவர்கள், சிந்திப்பவர்கள் கட்டாயம் உங்களுக்கு ஒட்டு போட மாட்டார்கள். எனவே 1 சீட் கூட வராது.


Jay
நவ 15, 2024 19:05

சீமான் முதல்வர் ஆனாலும், மீனவர்களை சிங்கள ராணுவம் சிறைபிடித்தால் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் தான் எழுத முடியும். முதலமைச்சருக்கு பக்கத்து நாட்டுடன் பேசுவதற்கெல்லாம் அனுமதி இல்லை. மக்களை சும்மா தூண்டி விடுவது தான் இந்த சீமான் முயற்சி.


Ramesh Sargam
நவ 15, 2024 18:19

ஏதோ சொல்வாங்க, குலைக்கிற அது கடிக்காது என்று. அதுபோல இதுவும்…


Kumar Kumzi
நவ 15, 2024 18:16

மீனவரா கஞ்சா கடத்தல்காரனுங்களானு தெளிவா சொல்லுப்பா


Oviya Vijay
நவ 15, 2024 18:07

அநேகமாக 2026 சட்டசபை தேர்தல் இவரது கடைசி தேர்தலாக இருக்கக் கூடும்... இதுவரை இவரை நம்பி ஓட்டு போட்ட ஒரு கூட்டம் இவரை உத்தமர் என்று நம்பியது... ஆனால் விஜயலக்ஷ்மியிடமிருந்து வரும் ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு லட்சத்துக்கும் மேலான ஓட்டுக்களை இவர் இழக்கிறார் என்றே அர்த்தம்... சொந்த கட்சி தும்பிகளும் இவரது ஆணவ பேச்சுக்களால் ஒவ்வொருவராக கம்பி நீட்டி வருகின்றனர்... தேர்தல் கமிஷனின் விதிகளை ஒழுங்காக பின்பற்றாத காரணத்தால் இதுவரை வைத்திருந்த சின்னத்தை வேறு இழந்து நிற்கிறார். இனி நாதக என்ற ஒன்றின் இறுதி யாத்திரை கூடிய விரைவில் தொடங்கப் போகிறது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை