உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., கொடியில் யானை சின்னம்; தேர்தல் கமிஷன் பதில் இது தான்!

த.வெ.க., கொடியில் யானை சின்னம்; தேர்தல் கமிஷன் பதில் இது தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைச் சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது என பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளித்துள்ளது.தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கினார். சமீபத்தில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளன. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது. கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி 24 மணி நேரத்திலேயே பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபனை தெரிவித்தது.இது குறித்து, தேர்தல் கமிஷன் இன்று(செப்.,30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது. ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை.அரசியல் கட்சிக் கொடியில் இடம் பெறும் சின்னங்களுக்கு கமிஷன் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. தேர்தல் நேரத்தில் அவர்கள் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது. த.வெ.க., கொடிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் கமிஷன் பதில் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
செப் 30, 2024 18:46

நாலுவருஷம் இருக்கபோகிற கட்சிக்கு மீடியாகள் கொடுக்கிற அலப்பிர அதிகம்.


Narayanan
செப் 30, 2024 16:09

அரசியல் கட்சிகள் பண பட்டுவாடா பண்ணி ஓட்டுவாங்குவதையே அங்கீகாரம் செய்த தேர்தல் கமிஷன் இதெற்கெல்லாம் பதில் அளிக்குமா ? யார் பணப்பட்டுவாடா புகார் கொடுத்தாலும் விசாரணை செய்யாமல் அந்த அரசியல் கட்சி தேர்தலில் நிற்க தடைவிதிக்கவேண்டும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 30, 2024 14:27

அரசியல் கட்சிக் கொடியில் இடம் பெறும் சின்னங்களுக்கு கமிஷன் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது ..... தேர்தல் கமிஷன் பொறுப்பற்ற பதில் ...... தவெக கொடியை எதிர்ப்பவர்கள் ஐநாவிடமா போவார்கள் ????


panneer selvam
செப் 30, 2024 16:16

Party flag, its manifesto and rule of governance are not governed by election commission .If anything is objectionable , they can approach High Court seeking redressal .


வைகுண்டேஸ்வரன்
செப் 30, 2024 13:33

பிஜேபி யின் அழுத்தத்தால் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். எனவே பிஜேபி தேர்தல் கமிஷன், இந்த கட்சிக்கு எதிராக எதுவும் சொல்லாது, செய்யாது. இவரது கட்சி நாட்டில் நடக்கும் எதைப் பற்றியும் எதுவும் சொல்வதில்லை. என்ன கட்சியோ


Ms Mahadevan Mahadevan
செப் 30, 2024 13:11

விஜய்க்கு இது வேண்டாத வேலை. அரசியல் ஒரு சாக்கடை. அதிலும் தமிழ்நாட்டு அரசியல் படுமோசமான சாக்கடை. ஜாதி, மதம், போலியான சமூகநீதி உழல் போன்ற கிருமிகள் மிகுந்தது. விஜய்க்கு இது கெட்ட நேரம்


angbu ganesh
செப் 30, 2024 16:57

என்னங்க நீங்க சொல்றது இல்லாத வசூலை பொய்ய வட சுடற சினிமா விஜய விடவா அரசிய சாக்கடை


masetung
செப் 30, 2024 12:57

1000 Kodi செலவில் யானை சிலை வைத்த மாயாவதி அம்மா Ida சொல்லக்கூடாது. மக்கள் பணம் மண்ணு மாதிரி போச்சு அங்கே . யானைக்கு மரியாதை போச்சு அங்கே .... இப்போ யானை இங்கே வந்திருக்கு . என்ன நடக்கும் பார்க்கலாம்


M Ramachandran
செப் 30, 2024 11:33

தீமுகா வின் கிளை கட்சி. ஏதும் கொள்கை இல்லை தீ மு க்கா கொள்கைய்ய என்று சொல்லுகின்றதை வாழிமொழியும் கிளையய கட்சி. சொந்த மாக நினைக்க ஒன்றும் தெரியாது. தீ மு க்கா வின் கொல்லை வாசல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை