த.வெ.க., என்றாலே தி.மு.க.,வுக்கு உறுத்தல்
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், யார் பெயராவது திட்டமிட்டு நீக்கப்பட்டால், மீண்டும் விண்ணப்பித்து பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம் என்பதால், 22 சதவீத ஈரப்பதத்துடன், நெல் கொள்முதல் செய்வதை மத்திய அரசு ஏற்க வேண்டும். இது விவசாயிகளின் கோரிக்கை; தி.மு.க.,வின் கோரிக்கை அல்ல. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில், மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவதைப் போல தெரிகிறது. பழனிசாமி ஆட்சிக்கு வந்தால், இத்திட்டம் நிறைவேற்றப்படும் என சிலர் கூறுவது முட்டாள்தனம். நம் நாட்டில், 15 நொடிக்கு ஒரு கார் விற்பனையாவதாக செய்திகள் வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மெட்ரோ திட்டத்தை அனுமதிக்க வேண்டும். பீஹார் வெற்றிக்கும், தமிழக தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க.,வினருக்கு த.வெ.க., என்றாலே உறுத்தலாக இருக்கிறது. இதை, அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. -- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,