உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை பின்தொடர வேண்டாம், மரம் ஏற வேண்டாம்: தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்

என்னை பின்தொடர வேண்டாம், மரம் ஏற வேண்டாம்: தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தவெக தொண்டர்கள் என்னை பின் தொடர வேண்டாம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது மரம் ஏற வேண்டாம் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, தவெக தொண்டர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய 12 வழிகாட்டு நெறிமுறைகளை அவர் வெளியிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qoyww6m8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை; 1. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், அதை முடித்து விட்டுச் செல்லும் போதும் வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம்.2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள். சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.3.கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள். முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்து கொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழ வேண்டும்.4.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.5.காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கட்சியினர் தவிர்க்க வேண்டும்.6.வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.7.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் அனைவரும் சகோதர, சகோதரிகளே என்பதால் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.8.நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளவேண்டும். கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.9.உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ. கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.10.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.11. காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.12.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.இவ்வாறு நடிகர் விஜய் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

சுந்தர்
செப் 20, 2025 11:09

சொன்னா கேக்கவா போறாங்க?


ராமகிருஷ்ணன்
செப் 20, 2025 05:54

டீவிக்க கட்சியின் புள்ளிங்கோ கும்பல் செய்து வரும் சேட்டைகளை ஊக்கப்படுத்த, உற்சாகப்படுத்த திட்டம் போட்டு சொல்லி உள்ளார். இந்த மாதிரி கும்பலுக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது. சரக்கு, மிடுக்கு ரவுடி கும்பல் மாதிரி இது ஒரு வகை கும்பல். ஒரு தேர்தல் முடிந்த பிறகு அடங்கி விடுவான்கள்.


s.sivarajan
செப் 19, 2025 20:57

அணில் மரமேறுவதை தடுக்கலாமோ


M.Sam
செப் 19, 2025 20:37

நீங்க என்ன அட்வைஸ் பிண்ணனாலும் உங்க அணில் குஞ்சுகள் கேக்க மாட்டானுக.


Kanda kumar
செப் 19, 2025 20:01

காட்டுமிராண்டி கூட்டம். ஒன்னும் சொல்றதுக்கு இல்ல......


Rajan A
செப் 19, 2025 19:27

தவெக தொண்டர்கள் என்னை பின் தொடர வேண்டாம். அதுதான் சொல்லிட்டாரே.


திகழ்ஓவியன்
செப் 19, 2025 19:04

இவர்கல் மாவட்ட தலைவர் ஒருவர் விஜய் வரும் நேரத்தில் ELCY நிறுத்தி வைக்கும்படி கேட்டுள்ளார்


V.Mohan
செப் 19, 2025 19:00

இப்பவே சொன்ன பேச்சு கேக்காதவங்க ...தப்பித் தவறி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தா, பொதுஜனங்களோட நிலை?. அப்புறம் எம்.எல.ஏ. சீட்டுகளை யாரு வாங்குவாங்கன்னு தெரியுமா? திமுகவில பதவியில் இருக்கும் அண்ணன் தன் தம்பியை தவெகவில் சீட்டு வாங்க வைப்பார். அல்லது வேற கட்சியில் பதவியில் இருக்கும் வி.ஐ.பி.க்கள் தங்களது சொந்தங்களை தவெகவுக்கு. அனுப்பி கட்சி பதவிகளையும் கட்சியையும் ஹைஜாக் செய்யறதுக்கு ரெடியாக உள்ளனர். உங்களால் இதை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது ஜோசப் விஜய் அவர்களே உங்களது கொள்கைகள் வெற்று முழக்கங்களாக போகாமல் இருக்க உங்களது கருத்துகளுடன் ஒத்துப் போகும் இரண்டாம் கட்ட தலைவர்களை முன்னெடுத்தால் பிழைத்தீர்கள்.இல்லாவிட்டால் ஏசுவால் கூட உங்களை காப்பது கடினம்


SJRR
செப் 19, 2025 18:09

ஆறு அறிவு உள்ளவர்களுக்கு இதெல்லாம் சொல்லிதான் தெரியவேண்டுமா?


Svs Yaadum oore
செப் 19, 2025 17:52

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது மரம் ஏற வேண்டாம் என்று நடிகர் அறிவுரை ....இப்படி ஒரு அறிவுரை ,இது ஒரு கட்சி இவர் பின்னால் கூட்டம் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை