உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக்கபூர்வ விமர்சனங்களை கருத்தில் கொள்வோம்; மற்றதை கடந்து செல்வோம்: விஜய்

ஆக்கபூர்வ விமர்சனங்களை கருத்தில் கொள்வோம்; மற்றதை கடந்து செல்வோம்: விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாநாட்டின் மூலம் வி. சாலை நமது வியூக சாலையாகவும், விவேக சாலையாகவும், வெற்றிச்சாலையாகவும் ஆனது என த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் கூறி உள்ளார். அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் தாம் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தி முடித்தார். மாநாட்டுக்கு வந்தவர்கள் 10 லட்சம் பேர், இல்லையில்லை அதற்கும் மேல் என்று தொண்டர்கள் இப்பவும் பூரிப்புடன் பெருமை பேசி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p3bv09va&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில் எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலை கையில் எடுப்போம், 2026ல் நம் இலக்கை அடைவோம் என்று தொண்டர்களுக்கு அவர் 4 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது; என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது?மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மாநாட்டில், நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி.எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள். சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக் கொண்டு கலந்துகொண்டீர்கள்.இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை. இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கழகத் தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி, கண்கள் கலங்க நிற்கிறேன்.எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது. உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன்.உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை.ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள். வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு, தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன்.இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை, மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? இவை எல்லாவற்றையும், அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன்.இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான், மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன். இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம். என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால் தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான, கண்ணியமான, ஆரோக்கியமான, உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர்.நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் 'தீவிர அரசியல் செய்தலாக' இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர்.ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன.நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்.இவ்வாறு அந்த கடிதத்தில் விஜய் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

narayanansagmailcom
அக் 30, 2024 01:47

கொள்கை என்று சொல்வதை விட மக்களுக்கு தேவையானதை செய்தாலே போதும் மக்கள் ஏற்று கொள்வர்


ஆரூர் ரங்
அக் 29, 2024 21:57

MGR அண்ணாயிஸம் தனது கொள்கை ன்னு அறிவித்தார். அதற்கு அவரே விளக்கம் அளிக்க முடியவில்லை. துக்ளக் பலமுறை கேட்டது.விளக்கம் கிடைத்தால் வெளியிட ஒரு பக்கத்தையே காலியாக விட்டு வைத்தது. இவரு அதுக்கும் மேல.


Mr Krish Tamilnadu
அக் 29, 2024 21:15

மாவட்ட செயலாளர், நகரம், வட்டம், துணை தலைவர், பொருளாளர் எனவும், மகளிர் அணி, இளைஞர் அணி, பாசறை, நேச அறை, என்ற வார்த்தைகள் எல்லாம் உங்க கட்சியிலேயும் உண்டா?. அந்த பதவி, அணி பெயர்களை எல்லாம் கேட்டு மக்கள் உள்ளுக்குள் கொதித்து இருங்காங்க. நற்பணி மன்றங்கள் மூலமே, நல்ல காரியங்கள் செய்து உள்ளார்கள் உங்கள் ரசிகர்கள். இயன்றவரர் இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வோம் என்று செய்தார்கள். பட ரிலீஸ் நாள்களில் பேரணி, மாஸ், போஸ்டர் எல்லாம் விரும்பப்பட்டு சொந்த செலவில் செய்து உள்ளார்கள். இந்த நற்பணி மன்றங்களை செயல்பாடுகளில் ஒருங்கிணைக்க, மன்றங்களுக்கு ரோல் நம்பர்களை உருவாக்கினால் செயல்பாடு எளிதாகவும், சிறப்பாகவும் இருக்கும். போட்டியிட விரும்புவர்களை குலுக்கல் முறை போன்ற புதிய முறையில் தேர்ந்து எடுங்கள். பலம், பலீவனம், பணம், குடும்ப பதவி, கட்சி பொறுப்பு என அலட்சிய ஆராய்ந்து சீட் தருவது என அனைத்தையும் மாற்றி யோசியுங்கள். வாக்காளர் சீட்டு கட்சியினரால் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது போல், முதலில் பூத் ஏஜெண்ட் கட்டமைப்பையும் நிறுத்த நடவடிக்கை எடுங்கள். ஆதார் ஆவணம் இருக்கிறது, அரசு அதிகாரிகள், காவல் துறை இருக்கிறது, வீடியோ பதிவு இருக்கிறது. பிறகு எதற்கு பூத் ஏஜெண்ட்.?. வாக்கு இயந்திரமே, ஹேக் செய்ய வாய்ப்பு உண்டு என விவாதம் நடக்கிறது. விஷுவல் கம்யூனிகேஷன் படித்த உங்களுக்கு தெரியாதா?. தமிழக சுற்று பயணங்களுக்கு, வலது கை இடது கை போல் உங்கள் எண்ணங்களை ஏற்கும் நட்சத்திர நல் உள்ளங்கள் நிச்சயம் உங்களுக்கு தேவை. பயணங்கள் பலன் கொடுக்கும்.


Ramesh Sargam
அக் 29, 2024 20:53

தீபாவளிக்கு நாம் பலவித பட்டாசுகளை வாங்குவோம். அதில் ஒரு சில நன்றாக வெடிக்கும். ஒரு சில புஸ் என்று போய்விடும். இது எந்த ரக பட்டாசு என்று 2026 தேர்தலின்போது தெரிந்துவிடும்.


M Ramachandran
அக் 29, 2024 20:51

கள்ள பணத்தை வைத்து சித்து விளயாட்டு காட்டி நாற்காலியில் உட்கார்ந்து ஹெலாய்க்க முடியுமா என்று ஒரு நப்பாசை. கடந்த கால வாழ்க்கையில் ஏதாவது நல்ல காரியங்கள் மக்களுக்கு ஆற்றியிருக்கிறாரா? கடந்த கால கருப்பு சிவப்பு சைக்கிள் சவாரியை பற்றி அல்ல


K. Karthikeyan
அக் 29, 2024 20:01

விமர்சனம் பண்ற அளவுக்கு, என்ன பேசிவிட்டார், சினிமா கிளைமாக்ஸ் வசனம் போல் உள்ளது, தீவாளி ரிலீஸ் படத்துக்கு, இந்த வருடம் கூட்டம் பாருங்க, உடனே அவர கிங் ஆக்கிடுவோமா......


கிஜன்
அக் 29, 2024 19:57

எந்த நேரத்துல பாயசம் உதாரணத்தை முய்சுக்கு எழுதுனோமோ .... எல்லோரும் பாயசம் பற்றியே பேசுகிறார்கள் ....


venkatan
அக் 29, 2024 19:20

எளிமையானவர்களையும், நேர்மாயானனவர்களையும் களத்தில் நிறுத்துக. கடல் தரும் கொடையான நன்மழை போல், மக்களின் வாக்கு நேர்மையான நல்லவர்களுக்கே. எண்ணம் சொல் செயல் மற்றும் செயலாக்க மன உறுதிப்பாடு முக்கியம். துதிபாடல் கூடாது அல்ல.திரையிலிருந்து பிம்பம் யதார்த்தத்திற்கு மாறுபடவேண்டும்.காந்திஜியின் போதனைகளைப் பின்பற்றவேண்டும்.


manokaransubbia coimbatore
அக் 29, 2024 19:03

அது போகட்டுங்கண்ணா,உங்க மனைவி மகன் இருவரும்பிரிட்டிஷ் குடியுரிமை உள்ளவர்களாமே. நீங்க ஒருத்தர்தான் தமிழர் இந்திய பிரஜை. அவங்களுக்கு இங்கே ஓட்டே கிடையாது. எப்படிங்கண்ணா. நீங்க தமிழர்களுக்கு வாழ்வு கொடுப்பேன் என்பது காதில் பூ சுற்றும் வேலை போல் இருக்குதே.


mindum vasantham
அக் 29, 2024 18:51

தளபதி விஜய் மதம் இனம் மொழி அனைத்தும் கடந்து அரசியல் செய்ய போகிறார் பெரும்பாலும் விஜய் படங்கள் குழந்தைகளுடன் பார்க்கும் படி இருக்கும் அது போல் தான் அவர் அரசியலும்.


புதிய வீடியோ