உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேவகோட்டை அருகே டூவீலர் - வேன் மோதல்; இருவர் பலி

தேவகோட்டை அருகே டூவீலர் - வேன் மோதல்; இருவர் பலி

சிவகங்கை: தேவகோட்டை அருகே டூவீலரும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேவகோட்டை அருகே இன்று காலை 8 மணி அளவில் தேவகோட்டை சிறுவாச்சி ரோட்டில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே டூவீலரில் வைக்கோல் கட்டுகளை லாரியில் ஏற்ற சென்றனர். எதிரே பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தனியார் வேன் தேவகோட்டை நோக்கி வந்தது. தேரளப்பூர் ஞான ஒளிபுறம் வேன் வந்து கொண்டு இருந்த போது, டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். பிரகாஷ் 30, என்பவர் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ