உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்!

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்!

சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ் ஆகியோர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகை மனோரமா. பெண் நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி(70), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4yyj71h3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மூச்சு திணறல் பிரச்னையால் அவதிப்பட்ட வந்தார். கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று காலை இவரது உயிர் பிரிந்தது. நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால் எது எடுபடவில்லை. சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. பூபதிக்கு ராஜராஜன் என மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். நாளை (அக் 24) இறுதி சடங்கு நடக்கிறது.

தேவா தம்பி காலமானார்

அதேபோல், இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ், 68, சென்னையில் காலமானார்.இசையமைப்பாளர் தேவா பாடல்கள் எந்தளவிற்கு ஹிட்டானதோ, அதன் பின்னணியில் அவரது சகோதரர்களான சபேஷ் - முரளியின் பங்களிப்பும் இருக்கும். இதனால் தேவாவின் படங்களில் இசை உதவி என்பதில் சில படங்களில் இவர்களது பெயர்களும் இடம்பெற்றிருக்கும். சபேஷ் - முரளி சகோதரர்கள் சேர்ந்து சில படங்களுக்கு இசையமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக 'மிளகா, இம்சை அரசன் 23ம் புலிகேசி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து' படங்களில் பணியாற்றியுள்ளனர். தற்போது திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் சபேஷ் (எம்.சி. சபேசன்). இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12:15 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 68. சபேஷின் மறைவுக்கு திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

KOVAIKARAN
அக் 23, 2025 19:30

இறந்த பின் அவர்களின் குணங்களை தரக்குறைவாக விமர்சிப்பது அழகல்ல. இன்று இறந்த இரண்டு திரைக் கலைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்கள். அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.


Kanakala Subbudu
அக் 23, 2025 18:27

ஒரு நல்ல இசை கலைஞன். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அவருடைய மற்ற பழக்கங்களை பற்றி இங்கே குறிப்பிடுவது நாகரிகம் இல்லை.


Padmasridharan
அக் 23, 2025 17:25

சாந்தியடையட்டும் சாமி..


ديفيد رافائيل
அக் 23, 2025 17:01

சினிமாவில் நடிப்பவர்கள் alcohol drink குடிச்சு தான் சாகின்றனர். குடிப்பவர்கள் செத்து தொலையட்டும், இவனுங்க நாட்டுக்கு பிடிச்ச சாபக்கேடு.


Jey a
அக் 24, 2025 02:07

உன் சமூகத்தவர் தன திமுகாவை ஒட்டு போடுவது , போதை பொருள் தகுசாகத்தில் கொண்டு வந்தது அன்சாரி என்ற உன் சமூகத்தவர் அதுக்கு ஒன்னும் பேசமாட்ட்ய


R. SUKUMAR CHEZHIAN
அக் 23, 2025 16:52

ஓம் சாந்தி


ram
அக் 23, 2025 16:31

அதற்கு இங்கு இருக்கும் திராவிட அரசுகள்.


Subramanian
அக் 23, 2025 15:35

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


M. PALANIAPPAN, KERALA
அக் 23, 2025 15:25

ஆழ்ந்த இரங்கல்கள், அவர்கள் இருவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்.
அக் 23, 2025 15:24

இரண்டு பேருமே தண்ணி வண்டி இருவரும் இறைவனடி சேர பிரார்த்தித்திப்போம்...


Abdul Rahim
அக் 23, 2025 13:36

RIP....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை