உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு

இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' இரட்டை இலை சின்னம் தொடர்பாக அளிக்கப்பட்டு உள்ள மனுக்கள் மீதான விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்,'' எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.'உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் தீர்வு காணும் வரை, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது; பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது' என, தேர்தல் கமிஷனிடம், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள் கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் புகார் மனுக்கள் அளித்தனர். இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. அதற்கு தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்க இடைக்கால தடை விதித்து, கடந்த மாதம் 9ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக் கோரி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், வா.புகழேந்தி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், அருள்முருகன் அமர்வு, ''சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்தல் கமிஷன் விசாரணையை தொடரலாம். புகார் மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பின், தேர்தல் கமிஷன் விசாரணையை துவக்கலாம். 'தேர்தல் கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது' என உத்தரவிட்ட நீதிபதிகள், பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்தனர்.இந்நிலையில், இ.பி.எஸ்., சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,' இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டி உள்ளதால், காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்,' எனக்கூறி உள்ளார்.இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V K
ஏப் 04, 2025 10:35

என்ன கால கெடு அதிமுக வில் பழனி இருக்கும் வரை அது ஒரு சாப கேடு


Kasimani Baskaran
ஏப் 04, 2025 03:51

பல அணிகளாக இருக்கும் இவர்கள் ஒன்றாக சேர என்ன கொள்ளை வந்தது என்றுதான் இன்றுவரை ஒருவருக்கும் புரியவில்லை..


Easwar Kamal
ஏப் 04, 2025 00:22

இந்த எடபாடியார் தொல்லை தங்க முடியல சாமி.


Anantharaman Srinivasan
ஏப் 04, 2025 00:07

இரட்டை இலை சின்னம் வழக்கு தொடுத்திருக்கும் அத்தனை பேருக்கும் மக்கள் நலனைவிட, கட்சி கணக்கிலிருக்கும் பணத்தின் மீதும் முதல்வர் பதவி மீதும் தான் குறி. அதற்குத்தான் இந்த போட்டாபோட்டி.


rajen.tnl
ஏப் 03, 2025 22:54

துரோகத்தை வாழ வைக்க என்னவேண்டுமானாலும் செய்வார் எடப்பாடி


m.arunachalam
ஏப் 03, 2025 22:20

இ பி எஸ் ஒத்துபோகமுடியாமல் வழக்கு தொடுக்கும் நபர்களுடன் நிரந்தரமாக ஒத்துப்போக விரும்பும் நபர்கள் எத்தனை பேர் ?. தெளிதல் நலம் .


முக்கிய வீடியோ