வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அரசுப் பணிகளில் அமர லஞ்சம், அரசுப் பணியில் மாறுதலுக்கு லஞ்சம், அரசுப் பணியில் பதவி உயர்வுக்கு லஞ்சம் என கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகம் சீரழிக்கப்பட்டு விட்டது. இலை மறைவு காயாக இருந்த லஞ்சம் இன்று வற்புறுத்தி பெறும் நிலைக்கு வந்து விட்டது. திராவிட கட்சிகளின் வாக்கு வங்கி இலவசங்களால், அரசு பத்து லட்சம் கோடி கடனில் மூழ்கி வட்டி கட்ட இயலாமல் தவிக்கிறது. தேர்தல் தோறும், ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர் , கோழி பிரியாணி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறது. மது மற்றும் போதைப் பொருட்கள், மக்களை சிந்திக்க விடாமல் சீரழிக்கிறது. ஆற்று மணல் கொள்ளை, மலைக் குன்றுகள் கொள்ளை என ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஓரணியில் திரண்டு, கூட்டணி அமைத்து நடத்தும் கொள்ளையால், தமிழகம் செய்வது அறியாது மிரண்டு போய் நிற்கிறது.
இது வேர்களில் ஏற்பட்ட வியாதி. அரசின் கடைநிலை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது. இந்த லஞ்ச பணத்தில் பகுதி உயர் மட்டம் வரை பாய்கிறது. இந்த லட்சணத்தில் இன்னும் 10000 அரசு காலி பணியிடங்கள் நிரப்ப உத்தேசம். சராசரியாக 100 மண்டலங்களில் தலா 100 பேர் நிரப்ப முனைப்பு. இது வருங்காலத்தில் லஞ்ச நோயை சற்றும் குறையாத நிலையில் வைத்திருக்கும். சில நாட்கள் முன்பு ஒரு பேருந்தில் பயணம் செய்த போது ஒரு பெண்ணின் கைபேசி உரையாடலை கேட்க நேர்ந்தது. அவர் ஏதோ பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பித்து இருப்பார் போல. மேலதிகாரி அவருக்கு எந்த இடத்திற்கு மாறுதல் என்று முன்கூட்டியே தெரியப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இவரை கிருஷ்ணகிரி அல்லது ஓசூர் விருப்ப தெரிவு செய்ய வலியுறுத்துகிறார். "கை நிறைய சம்பாதிக்கலாம்" என ஆசையை தூண்டுகிறார் என கூறுகிறார். அந்த பெண்மணி குறிப்பிட்ட அந்த இரண்டு இடங்களை நிராகரிப்பதாக அந்த அதிகாரியிடம் கூறியதாக சொல்கின்றார். அவர் யாரோ? எந்த துறையோ? இந்த லட்சணத்தில் அரசு பணிகள் இருக்கின்றன. நிர்வாகம் சற்றும் பாரபட்சமற்ற தயவு தாட்சண்யமற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்தால்தான் அரசு இயந்திரம் சீர்படும்.
அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல்கள் பெருகி வருகிறது.
இப்படி அரசு அலுவலர்களை கைது செய்தால் ஒரு அரசு அலுவலகத்திலும் வேலை செய்ய ஒரு ஆளும் இருக்க மாட்டார்கள்.இல்லாவிட்டால் பிடித்த உடனே டிஸ்மிஸ் செய்யுங்கள்.பயந்து வேலை செய்வார்கள்.இந்தியாவில் இது இரண்டும் சாத்தியம் இல்லை.
எல்லாருக்கும் கோட்டா இருக்குடா
தையல்நாயகிக்கு ஏன் கழுத்தில் தையல் போட்டுஇருக்கிறது?
எந்த கட்சி அரசியல்வாதியாவது லஞ்சத்தை ஒழிப்போம்னு வாக்குறுதி குடுக்கறானுங்களா?
உடன் பதவி நீக்கம் செய்யவேண்டும். லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்க முடியாது. மேலும் முதன் முதல் சொத்து வரி கட்டும்போதும் லஞ்சம் அழ வேண்டும். லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு அதிகாரிகள் . 2026 ஒன்று தான் வழி
இவர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
கோட்டாவில் பூத்த ஜோடி புறாக்கள்.