மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
59 minutes ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 29
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மேலமருதூரைச் சேர்ந்த மாரியப்பன் மகள் கலைச்செல்வி 19. தனியார் பாலிபேக் நிறுவனத்தில் வேலை செய்தார். அதே பகுதியில் வசிக்கும் அழகர் மகள் மேனகாதேவி 14, குளத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்தார். நாகராஜ் மகள் கனிச்செல்வி 19. இவர்கள் மூவரும் அங்குள்ள கண்மாயில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற கலைச்செல்வி உயிருக்கு போராடினார். அவரை காப்பாற்ற மேனகா தேவியும் கனிச்செல்வியும் அடுத்தடுத்து குளத்தில் இறங்கி ஆழமான பகுதியில் சிக்கினர். இதில் கலைச்செல்வி, மேனகாதேவி பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிய கனிச்செல்வியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தருவைகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
59 minutes ago | 2
3 hour(s) ago | 29